சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) முகம்மட் அபாடிண்டி அலி, தாம் 1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பான ஆதாரங்களை மறைப்பதாக முன்னாள் பிரதமர் மகாதிர் குற்றம் சாட்டுவதை மறுக்கிறார்.
ஏஜி என்ற முறையில் தாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் விசாரணை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை என்றாரவர்.
“இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை”, என்றவர் மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் கூறினார்.
நேற்று, மகாதிர் அடுத்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபான் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் அது அபாண்டியிடம் அதிகாரத்துவ இரகசிய சட்ட(ஓஎஸ்ஏ)த்தைப் பயன்படுத்தி ஆதாரங்களை மறைத்தது ஏன் என்று விளக்கம் கேட்கும் என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்த மிரட்டலுக்கெல்லாம் அபாண்டி அஞ்சவில்லை.
“நான் மகாதிர் உள்பட எவருக்கும் அஞ்சேன். நான் இறைவனுக்கு மட்டுமே பயப்படுகிறவன். மனிதர்களுக்குப் பயப்படுவதில்லை”, என்றாரவர்.
கடந்த ஆண்டு ஜனவரியில் அபாண்டி, ரிம2.6பில்லியன் நன்கொடை விவகாரத்திலும் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் விவகாரத்திலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குற்றம் எதுவும் இழைக்கவில்லை என்று அறிவித்தார்.
1எம்டிபி நிதிகள் கையாடப்பட்டிருப்பதாக அமெரிக்க நீதித்துறை கூறியிருப்பதையும் அவர் நிராகரித்தார்.
நஜிப் என்ற இறைவனுக்கு மட்டுமே பயப்படுகிறவர். வேண்டிய அனைத்தையும் வழங்கும் தன் இறைவனுக்காக கைகட்டி, வாய்ப்பொத்தி, வாலாட்டி நிற்கும் விசுவாசியாவார், இவர். குரங்குக் கையில் பூமாலை என்ற நிலைமைதான், இத்திருநாட்டிற்கு !