ஓர் எட்டு வயது மாணவன் வகுப்பில் விளையாடியதற்காக அவனது ஆசிரியர் ஓர் இரும்பு தகட்டை சூடாக்கி அவனது கன்னத்தில் சூடு வைத்துள்ளார். சூடு வைத்த இடத்தில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன.
இச்செயலைப் புரிந்த ஆசிரியர் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்ட வேண்டும் என்று அம்மாணவனின் தந்தை சைட் சுடு, 32, கோரிக்கை விடுத்துள்ள்ளார். அக்கோரிக்கையில் அவர் உறுதியாக இருக்கிறார்.
அந்த ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கப்படாவிட்டால், பள்ளிக்கூடத்தின் முன்பு அவரும் இதர ஆதரவாளர்களும் மறியலில் இறங்கப்போவதாக அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
கடந்த ஜூலை 11இல், முகமட் பிகிரி என்ற அந்த மாணவனுக்கு, கன்னத்தில் சூடு வைத்ததோடல்லாமல், சூடு வைக்கப்பட்ட அதே இடத்தில் அந்த ஆசிரியர் அவனை அறைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சைட் போலீஸ் புகார் செய்துள்ளார்.
சைட் அளித்த தகவலின்படி, அவரும் அவரது மணைவியும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடத்திற்குச் சென்று தலைமையாசிரியரைச் சந்தித்தாகவும், பையனுக்கான வைத்தியச் செலவைக் கொடுத்து பிரச்சனையை சுமுகமாக தீர்த்துக்கொள்ள முன்வந்தார்.
மேலும், அந்த ஆசிரியருக்கு எதிரான வழக்கைக் கைவிட்டுவிடுமாறும் கேட்டுக்கொண்டார், ஏனென்றால் அந்த ஆசிரியர் இளைஞர் என்றும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் தலைமையாசிரியர் கூறினார்.
இந்தச் சந்திப்பு இரகசியமாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
போலீசார் இந்த விவகாரத்தில் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகக் கூறிய சைட்., அவர்கள் நடவடிக்கை எடுக்க ஒரு மாத காலத்திற்கு மேல் பிடிக்கும் என்று கூறிதாகத் தெரிவித்தார்.
அந்த ஆசிரியர் வேலை நீக்கம் செய்யப்படுவதைத் தவிர வேறு எந்தத் தீர்வுக்கும் ஒப்புக்கொள்ளபோவதில்லை என்று சைட் திட்டவட்டமாகக் கூறினார்.
அத்தோடு அவர் ஒரு மனோதத்துவ டாக்டரிடம் பரிசோதனை செய்யவும் வேண்டும். மன நோயாளிகளை வேலையில் வைத்திருப்பது ஆபத்து!
கல்வி அமைச்சு என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பதை பார்ப்போம் ? உலக மக்களும் இதனை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர் ?
இது ஒரு வன்முறை என்ற அடிப்படையில் இவரின் மேல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவரின் இந்த கொடூர செயலுக்கு தகுந்த தண்டனை அளிப்படவேண்டும் !! வேலை நீக்கம் சரியான தீர்வல்ல ! இந்த ஆசிரியரின் குற்றம் நீதி மன்றத்தில் நிரூபிக்க பட்டு இவருக்கு இந்த குற்றத்திற்கான தண்டனை வழங்க பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் !! மற்றவர்களுக்கு படமாக அமைய வேண்டும் !! மாணவர்கள் தவறு செய்தாள் குண்டர்கள் !! ஆசிரியர்கள் வன்முறையில் ஈடுபட்டால் சுமுகமா !!