கட்சித் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்ற உத்தரவு பற்றிப் பேசலாம் என்றால் சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) டிஏபி தலைவர்களைச் சந்திக்க பயப்படுகிறதே என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அங்கலாய்த்துக் கொண்டார்.
ஆர்ஓஎஸ்ஸைச் சந்திக்க அனுமதி கேட்டு டிஏபி எழுதிய கடிதத்துக்கு இன்னும் பதிலில்லை என்று பினாங்கு முதலமைச்சருமான லிம் கூறினார்.
2013 மத்திய செயலவைக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஜூலை 17-இல் டிஏபி உத்தரவிட்டு கடிதம் எழுதியது ஆர்ஓஎஸ். அந்த உத்தரவுக்கு டிஏபி பதிலளிக்க 14நாள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் இன்னும் 11 நாள்கள்தான் எஞ்சியுள்ளன. அதற்கிடையில் ஆர்ஓஎஸ்-ஸைச் சந்திக்க விரும்புகிறது டிஏபி.
“எதற்காக எங்களைச் சந்திக்க அஞ்சுகிறீர்கள்? எதை நினைத்து ஆர்ஓஎஸ் பயப்படுகிறது?”, என்று லிம் வினவினார்.
“நீங்கள் சாதாரண ஒரு தலைவரைச் சந்திக்கப் போவதில்லை. ஒரு எம்பி-யை, ஒரு முதலமைச்சரைச் சந்திக்கப் போகிறீர்கள். ஒரு சிஎம்-மைச் சந்திக்க ஏன் பயம்?”, என இன்று கொம்டாரில் செய்தியாளர் கூட்டமொன்றில் லிம் கேள்வி எழுப்பினார்.
ஆர்ஓஎஸ் இன்னும் 4 ஆண்டுகள் கழித்து டிஏபி தலைவர்களைச் சந்திக்க நாள் குறிப்பிடுவர்கள். ஆர்ஓஎஸ் ஒரு அரசாங்க அலுவலகம். ஆகவே அவர்களின் நடவடிக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்திருக்க வேண்டும். டிஏபி விவகாரம் ஒரு பெரிய பிரச்சினையே அல்ல, அப்படி இருக்கையில் 4 ஆண்டுகள் கழித்து ஒரு முடிவை கூறுவது சரியான செயல் அல்ல. டிஏபி அரசாங்க தலைமை செயலாளருக்கு ஆர்ஓஎஸ் நடவடிக்கை சரியா என்று விளக்கம் கேட்க வேண்டும்.
ஆர் ஓ எஸ் நடவடிக்கை சரியானதது அல்ல என்பது உலகமே அறியும் . டி எ பி தலைவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாது என்பதனை ஆர் ஓ எஸ் அதிகாரிகளுக்கு நன்கு தெரியும், அத்துடன் டி எ பி தலைவர்கள் நன்கு படித்து ஆங்கிலத்தில் புலமை பெற்றிருப்பதால் அவர்களின் பெரும்பாலான கேள்விகள் ஆங்கிலத்திலையே கேட்கப்படும் என்பதனால் , ஆங்கிலம் விளங்காத ஆர் ஓ எஸ் அதிகாரிகள் அப்பா இனி – அப்பா இனி என சொல்லி தடுமாற்றம் கொள்வதை விரும்பவில்லை போலும் . எய்தவன் இருக்க அம்பை நொய்து என்ன பயன் ?