பிஎன் பங்காளிக் கட்சிகள் மலாய்க்காரர்- அல்லாத தொகுதிகளில் வெற்றிபெற்று தங்களின் ஆற்றலைக் காண்பிக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
மசீச, மஇகா, கெராக்கான் ஆகியவை மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாகவுள்ள தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறுவதை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது.
“அவர்கள் மலாய்க்காரர்- அல்லாத தொகுதிகளில் வெற்றிபெற சிரமப்படுகிறார்கள். இது உண்மை”. அம்னோ துணைத் தலைவருமான ஜாஹிட் ஹமிடி நேற்று புக்கிட் பிந்தாங்கில் அம்னோ தொகுதி பேராளர் கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றினார்.
தாம் குறைகூறலாக அவ்வாறு சொல்லவில்லை என்றும் பிஎன் பங்காளிக் கட்சிப் பேராளர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதே அம்னோவின் விருப்பமாகும் என்றும் அவர் சொன்னார்.
அம்னோ உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் ஓரளவு மனவருத்தம் தந்திருந்தாலும் அது பங்காளிக்கட்சிகளிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பேராக்கில், மஇகா ஒரு இட்த்திலும் வெற்றிபெறவில்லை ஆனாலும் சட்டமன்றத் தலைவர் பதவியும் பேராக் மந்திரி புசாரின் சிறப்பு ஆலோசகர் பதவியும் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ளன என ஜாகிட் கூறினார்.
அம்னோவின் இனரீதியிலான அரசியலுக்கு ஓரளவு இந்த ம.இ.கா.,ம.சீ.ச., கெராக்கான் ஆகிய கட்சிகள் ஈடுகொடுத்து காலம் தள்ளுவதே பெரிய விஷயம். பாரிசான் என்றால், மலாய்க்காரர்கள் கூடாரம் என்றே இந்நாட்டிலுள்ள அனைத்து இந்திய,சீன மலேசியர்களும் நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு மலாய்க்காரர் அல்லாதவர்களை அரசியலில் ஓரங்கட்டியது இந்த அம்னோ. தற்போது பாரிசானுக்கு ஓரளவு மலாய்க்காரர் அல்லாதோரின் வாக்குகள் கிடைப்பது, கிணற்றுத் தவளைகளின் வாக்குகள் என இந்நாட்டில் சிறு குழந்தையும் அறியும். அதிருக்கட்டும். சிலாங்கூரில் PAS ,PKR ஆகிய கட்சிகள் வெற்றிபெற்று, அந்த மாநில ஆட்சியை கைப்பற்றியதே, இவை அனைத்தும் எதிர்த்து நின்றது அம்னோவைத்தானே. மலாய்க்காரர்கள் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதிகள்தானே. அம்னோ ஏன், தோற்றது? மற்ற இனத்தவரை குறை கூறுவதே உங்கள் வேலையாகிவிட்டது. ஆமா! தெரியாமல்தான் கேட்கிறேன், மேலே நான் கூறிய காரணங்களை போல இன்னும் எவ்வளவோ காரணங்கள் உள்ளன. இதையெல்லாம், இந்த ம.இ.கா.,ம.சி.ச.,கெராக்கான் கட்சியெல்லாம், தங்களது எஜமானர்களிடம்(அம்னோ) வாய் திறக்க மாட்டார்களா?
திரு பாராசூட் மணியம் அவர்களுக்கு எப்படி திரு பழனி ஆதவர்களை அழிக்கலாம் என்று யோசிப்பதற்கே நேரம் போதவில்லை, பிறகு எங்கு வாய் திறக்க வாய்ப்பு இருக்கிறது ?
நாம் பிற இனத்தின் வாழை பிடித்து கொண்டு போய்க்கொன்றுருகிறீராம்…இதை நாம் நிறுத்தவேண்டும் ……நம்மவர்களும் சுய மரியாதையுடனும் இந்த நாட்டில் வாழவேண்டும் ……தமிழன் என்று சொல்லடா …நீ தலை நிமிர்த்து நில்லடா ….
நாட்டு காரண ஏதும் கேட்கக்கூடாது!! எல்லா சலுகையும் நாட்டான் னுக்குத்தான் என்று !! மானங் கேட்ட சாதாரண தமிழனே சொல்லித்திரியும் போது ! இவனெல்லாம் பதவிக்கும் ! பணத்திற்கும் அடி வருடிகளாய் மலாய் காரனின் காலில் விழுந்துகிடப்பவன் வாய் திறப்பானா !! வாய் திறக்க முடியுமா !!