சரவாக்கில் ஐந்தாவது நபர் ரேபிஸுக்குப் பலி

rabiesசரவாக்கில்   ரேபிஸ் (வெறிநாய்க்கடி   நோய்)   ஐந்தாவது  நபரைப்  பலி   கொண்டிருக்கிறது.

கம்போங்   ரேமுனைச்   சேர்ந்த   52-வயது  டிண்டிங்    லம்பாங்   நேற்றிரவு    மணி   10.43க்கு   சரவாக்   பொது   மருத்துவமனையில்   அந்நோயால்    இறந்தார்    என   சுகாதார   தலைமை    இயக்குனர்    டாக்டர்   நூர்   ஹிஷாம்   அப்துல்லா    கூறினார்.

டிண்டிங்சையும்   சேர்த்து    இதுவரை   ஐவர்    வெறிநாய்க்கடி   நோய்க்குப்    பலியாகியுள்ளதாக   நூர்   ஹிஷாம்   தெரிவித்தார்.   எல்லாருமே     சரவாக்கின்   செரியான்   மாவட்டத்தைச்    சேர்ந்தவர்கள்.

“புதிதாக   யாருக்கும்   அந்நோய்   கண்டிருப்பதாகத்     தெரியவில்லை”,   என்றாரவர்.

டிண்டிங்ஸ்   மே  மாதத்   தொடக்கத்தில்    ஒரு    நாயால்   கடிக்கப்பட்டார்.   ஜூலை   11-இல்   அவர்  மருத்துவமனையில்    சேர்க்கப்பட்டார்.