கெடா மருத்துவமனை கட்டப்படும்: மந்திரி புசார் உறுதி

kedahவாக்குறுதி   அளித்தப்படி    கெடா   மருத்துவமனை    கட்டப்படும்       என   மந்திரி   புசார்   அஹமட்  பாஷா   முகம்மட்  ஹனிபா    கூறினார்.

மருத்துவமனை    கட்டப்படும்   என்பது    தேர்தலுக்காக    அளிக்கப்பட்ட    வெற்று  வாக்குறுதி   அல்ல     என்றவர்   வலியுறுத்தினார்.

“குறைகூறல்   வரும்   என்பது    எதிர்பார்க்கப்பட்ட   ஒன்றே.  மக்கள்   ஒன்றைப்   புரிந்து  கொள்ள   வேண்டும். மருத்துவமனை   கட்டுவதற்கு,   செலவினம்,  ஒதுக்கீடு   முதலியவை     குறித்து   ஆழமாக   ஆராய    வேண்டும்.

“ஆனால்,  அரசாங்கம்   கொடுத்த   வாக்குறுதியிலிருந்து   பின்வாங்காது.  மருத்துமனை    கட்டப்படுவது   நிச்சயம்.

“கூட்டரசு   அரசாங்கத்திடமிருந்து    ஒப்புதல்   கிடைத்து   விட்டது.  செப்டம்பர்   மாதம்   டெண்டர்களுக்கு   அழைப்பு   விடுப்போம்”,  என்றவர்  சொன்னார்.