‘நாங்கள் கிறிஸ்துவ ஆசிரியர்களை தடை செய்ய வேண்டும் எனக் கேட்கவில்லை’

அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் கிறிஸ்துவ ஆசிரியர்கள் கற்பிப்பதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என தான் கேட்டுக் கொண்டதாக கூறப்படுவதை மலாய் உரிமைப் போராட்ட அமைப்பான பெர்க்காசா மறுத்துள்ளது.

பெயர் தெரியாத தரப்புக்கள் கதைகளை உருவாக்கி அவற்றை பெர்க்காசா சார்பில் எந்த அதிகாரமும் இல்லாமல் பரப்பி வருவதாக இன்று அதன் தலைவர் இப்ராஹிம் அலி வலியுறுத்தினார்.

“நான் பெர்க்காசா தலைவர். நாங்கள் அந்த யோசனையைத் தெரிவிக்கவே இல்லை. எங்களது அண்மைய ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கூறப்பட்டது போல நாங்கள் இன ஐக்கியத்துக்கு துணை நிற்கிறோம்,” என இப்ராஹிம் ( பாஸிர் மாஸ்-சுயேச்சை உறுப்பினர்) மக்களவையில் கூறினார்.

புதிய ஊடகங்களில் பலப்பல கதைகளை உருவாக்குகின்ற அடையாளம் தெரியாத மனிதர்கள் அந்தத் தீய நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.”

“அல்லது பெர்க்காசா சார்பில் அதிகாரத்துவ அறிக்கைகளை வெளியிடுவதற்கு அதிகாரம் இல்லாத தனிநபர்கள் தங்களது சொந்தக் கருத்துக்களாக அதனை தெரிவித்திருக்கக் கூடும்.”

இப்ராஹிம், பிஎன் துவாரான் உறுப்பினர் வில்பிரட் மோஜிலிப் பூம்புரிங் எழுப்பிய கேள்விக்கு கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் பதில் அளித்துக் கொண்ட போது இடைமறித்துப் பேசினார்.

அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் சேவை செய்வதிலிருந்து கிறிஸ்துவ ஆசிரியர்களை விலக்கி வைக்க வேண்டும் என பெர்க்காசா வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறப்படுவது மீது அமைச்சின் நிலை என்ன கேள்வி நேரத்தின் போது பூம்புரிங் வினவியிருந்தார்.