பக்கத்தான் ஹராபான் அதன் அடையாளச் சின்னத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) உத்தரவிட்டுள்ளதாக அதன் அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“அடையாளச் சின்னத்தில் ‘ஹராபான்’ என்றிருப்பதுடன் ‘பக்கத்தான்’ என்பதையும் இணைத்து ‘பக்கத்தான் ஹராபான்’ என்றாக்கும்படி ஆர்ஓஎஸ் அறிவுறுத்தியுள்ளது”,என இன்று புத்ரா ஜெயாவில் ஆர்ஓஎஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாதிர் தெரிவித்தார்.
தேவையான மாற்றத்தைச் செய்து இன்னும் இரண்டு நாள்களில் மீண்டும் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யப்போவதாக அவர் கூறினார்.