டாக்டர் மகாதிர் முகம்மட் அவரது சொத்துகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள வேளையில் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி தம்மிட ஊழல் இல்லை என்று பிரகடனம் செய்துள்ளார்.
உள்துறை அமைச்சருமான அவர் தம் அமைச்சிலும் ஊழல் என்பது கிடையாது என்றார்.
“என்னிடமும் உள்துறை அமைச்சிலும் அதன்கீழ் உள்ள அத்தனை துறைகளிலும் ஊழல் என்பதே கிடையாது.
“நாங்களும் எங்களைச் சார்ந்தவர்களும் ஊழலற்றவர்களாக இருப்பது எளிதல்லதான் ஆனால், உயர் நெறிகளைக் கொண்டிருந்தால் அது சாத்தியம்தான்”, என ஜாஹிட் கூறினார்.
துணைப் பிரதமர் இன்று காலை, குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குனர் முஸ்தபார் அலியும் 400 அதிகாரிகளும் ஊழலற்று இருப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.
திருடன் நான்தான் திருடினேன் என்று ஒப்பு கொள்வானா ?
அதுபோலத்தான் துணை பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் என்னிடம் ஊழல் இல்லை என்கிறார்.
பிரதமர் நஜிப் PB பாஷையில் PENDEK KATA அமைச்சர்களும் திருடர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
நான் சொல்வது பொய்யாக இருப்பின் என் இருதயம் இயங்காது என இறைவன் இவரை படைத்தது, அதனை அவர் உணர்த்திருந்தால் ??? வாய் திறக்காமல் மௌனம் காத்திருப்பர் இந்த அறிவுத்திறன் , ஆங்கில மொழி திறன் இல்லாத இந்நபர்.