டாக்டர் மகாதீரைக் காயப்படுத்த எண்ணிய சந்தேக நபருக்கு, பெர்சத்து கட்சியின் ஆர்மாடா டி-சட்டை இலவசமாகக் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று, ஷா ஆலாமில் ‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக, அச்சட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
தாங்கள் ஏற்பாடு செய்திருந்த மண்டபத்திற்குள் நுழைய ஏதுவாக, கலகக்காரர்கள் அச்சட்டைகளை அணிந்திருக்கலாம் என ஆர்மாடா தலைவர் ஷேட் சட்டிக் அப்துல் ரஹ்மான் கூறினார்.
அதுமட்டுமின்றி, பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதீரைக் காயப்படுத்தும் நோக்கத்துடனேயே அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சி இரத்தானதற்குப் பின் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், பெர்சத்து இளைஞர் பிரிவின் தலைவருமான ஷேட் சட்டிக், காவல்துறையின் முதற்கட்ட விசாரணையும் இதனையேக் காட்டுவதாக் கூறினார். கலகக்காரர்கள் அணிந்ததாக நம்பப்படும் சிவப்பு நிற சட்டைகளும் செய்தியாளர் சந்திப்பின் போது, உடன் கொண்டுவரப்பட்டன.
நிகழ்ச்சியில் கலவரம் செய்ததாக நம்பப்படும், காயப்பட்டிருந்த மூவரைப் பிடித்து, பெர்சத்து ஆதரவாளர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 17-லிலிருந்து 19 வயதுக்குட்பட்ட அம்மூவரில், இருவர் ஆர்மாடா பெர்சத்து டி-சட்டை அணிந்திருந்தனர்.
இன்றைய ‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்ச்சி மதியம் 3 தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெறவிருந்தது. இருப்பினும், சுமார் 5.30 மணியளவில், ‘மெமாலி சம்பவம்’ குறித்த வருகையாளரின் கேள்விக்கு, டாக்டர் மகாதீர் பதிலளிக்கையில் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
காலணி, போத்தல், நாற்காலி போன்றவற்றால் மகாதீர் தாக்கப்பட்டதாகவும், ஆனால், பாதுகாவலர்களின் உதவியால் அவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்கள் பற்றிய தகவல் சரிவர தெரியவில்லை.
கடந்தகாலத்தில் நமது தமிழ் சமூதாயம் இந்தகாக்காவாள் ஏழையானதுபோல் இவனும் ஏழையாகி சாகவேண்டும்! இன்று நாம் மானம் மரியாதை இழந்ததுபோல் இவனும் இவனது பிள்ளைகளும் மானம் கெட்டு,ரோசம் கெட்டு, இப்போதுவாங்கும் செருப்படி போல் பல வாங்கி சாகவேண்டும். இது இவன் நமது சமுதாயத்துக்கு செய்த துரோகத்தினால்நான் விடும் சாபமாகட்டும்.
கடந்த காலத்தில் நமது சமுதாயத்தை பாலக்கியவர் ஒருபக்கம் உண்மையாகஇருப்பின் , நம் சமுதாயம் அதனை மறப்பதிக்கில்லை , அதேவேளையில் பிரதமர் பதவியில் இருந்து இறங்கியபிறகும் ‘ பார்ட்டி பிரிபூமி ‘ Parti Pribumi ‘ என திரு முகுடிநுடன் ஒன்று சேர்ந்து அந்தக்கட்சியில் மலாய் சமூகம் மட்டுமே அங்கத்தினராக சேர முடியும் , முஸ்லீம் இல்லாத இந்தியர்கள் , சீனர்கள் அங்கத்தினர்கள் பெறமுடியாது , வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே கொடுக்கலாம் என வெட்ட வெளிச்சமாக கூறிய இந்த திரு மகாதீர் , திரு முகுடின் உருவாக்கும் கட்சிக்கு நமது, குறிப்பாக எனது ஒட்டு கிடையாது , அதேபோல ஆளும் கட்சியில் நமக்கு உரிய அங்கீகாரமும் , நமக்கு ஒரு சில முறம்போக்கு படிக்க தெரியாத, ஆங்கிலம் பேச தெரியாத, இலஞ்சத்தால் உருண்டு பிறழும் , பலமுறை நம் மதத்தை ,இனத்தை பற்றி இழிவாக பேசும் , கோவில் உடைப்பு , தமிழ் பள்ளியில் நடக்கும் இனப்பாகுபாடு சம்பவத்தை முக்குடிமறைக்கும் , சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத ஆட்சி கூட்டணிக்கும் நமது, எனது ஒட்டு கிடையாது . இது உறுதி . நன்றி
ஐயா TAPAH BALAJI அவர்களே எனக்கு காக்காத்திமிரை பற்றி 1967 லேயே தெரியும்– அவனின் malay dilemma புத்தகத்தை அப்போதே நான் படித்து விட்டேன். இப்போது imran போன்ற இனத்துரோகிகளை என்ன செய்வது? விலகி இருப்பதே நலம் என்று நினைக்கிறேன்.
பத்து மலையில் முருகன் இருக்கின்றான் ….இன்னும் என்ன என்னவோ நடக்குமோ ?
இடிக்கப்படக்க கோயில்கள் கொஞ்சமா? …துரத்த படடட தொடட தொழிலாளர்
கொஞ்சமா ?எந்த மலாய் வாக்குகளுக்காக தமிழனை அவமதித்தாரோ இன்று அவர்களே கொடுக்கின்றார்
இவன் மட்டுமா தமிழ் சமுதாயத்திற்கு துரோகம் செய்தான் !! இவனுடன் சேர்ந்து தமிழர்களை உச்சத்தில் வைக்கிறேன் என்று வீர வசனம் பேசிய தமிழனும் தானே துரோகம் செய்தான் !! அவனையெல்லாம் ஆண்டவன் இன்னும் விட்டு தானே வைத்திருக்கிறான் !ஏழை தமிழனின் எச்சத்தை தின்ற அந்த நாய்கள் இன்னும் பட்டம் பதவி என்று உலவி கொண்டு தானே இருக்கிறது !!
s.maniam அவர்களுக்கு தமிழன் மட்டும்தான் துரோகம் செய்தானா? இந்தியன் துரோகம் செய்வில்லயா?
இந்த அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டிருந்தால் இதற்கு முடிவே இல்லை .அவர்களை மறந்து நம் சமுதாயம் ஒன்றுபட்டு நம்மில் வறியவர்களை கைதூக்கிவிட வேண்டிய முயற்சிகளில் இறங்கி மாற்றுவழிகளில் சிந்தித்து செயல்பட நாம் தயாராக வேண்டும் .இல்லையேல் நம் எதிர்காலம் கேள்விக்குறியே.
இப்பகுதியில் வளம் வரும் அணைத்து அன்பர்களுக்கும் இருகரம் கூப்பி வணக்கம் கூறிக்கொள்கிறேன் . தங்களின் சமுதாய நோக்கத்திற்காக தங்களின் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் மகிழ்ச்சிகொள்கிறேன். இப்பகுதியின் வழி என்மனதில் பல நாட்களாக , ஆண்டுகளாக தோன்றி மறையும் என் எண்ணத்தை தங்களிடம் பரிமாறிக்கொள்கிறேன் , பல வேலைகளில் நம் நாட்டில் வெளியிடப்படும் நாளிதழ்களிலும் எழுதியுள்ளேன் .
நம் தமிழ் மொழிக்கு முக்கியம் கொடுப்போம் , தமிழ் மொழியினை வளர்ப்போம் என்பதே என் அவா. நம் தமிழ்மொழியினை வளர்ப்பது ; தமிழ் பள்ளி , தமிழ் நாளிதழ் , தமிழ் மொழியில் பேசுவது , தமிழ் மொழியை பயன் படுத்துவது , அவற்றில் ஒன்று தமிழ் மொழியில் விளம்பரம் செய்வது , விளம்பர பலகையில் தமிழ் மொழியில் எழுதுவது என்பதாகும் . ஒவ்வொரு கடைகளிலும் , வர்த்தக கூடங்களிலும் விளம்பரப்பலகை இருப்பதும் அதில் தனது கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விபரத்தை எழுதி இருப்பதை நாம் கண்டிருப்போம் . பல சம்பத்தப்பட்ட இந்தியர்களில் சொந்த கடைகளில் விற்கப்படும் பொருட்கள் அனைத்தும் இந்தியர்கள் வாங்கக்கூடிய பொருட்களாகும் , மற்ற சமூகத்தினர் , மற்ற இனத்தவர்கள் அப்பொருளை வாங்குவதில்லை , அந்த சம்பந்தப்பட்ட கடையின் வருமானம் இந்தியர்களால் பெறப்பட்டது என்பது உண்மையாகும் , அந்த சம்பந்தப்பட்ட கடைக்காரக்கு படி அளந்தது , அளக்கப்பட்டது இந்திய வாடிக்கையாளர்கள் என்பது உண்மை , அப்படி இருக்க அந்த சம்பந்த பட்ட கடைக்காரர்கள் வியபார பலகையில் தேசிய மொழியினை தவிர தமிழ் மொழியினை பயன்படுத்தாத காரணம் என்ன ? இந்தியர்களின் , தமிழர்களில் பணம் வேண்டும் , அவர்களில் ஊக்குவிப்பு வேண்டும், ஆனால் தமிழ்மொழி தேவையில்லை என்ற எண்ணமா? தமிழ்மொழியில் எழுதப்படாத கடை சொந்தக்கார்களிடம் தமிழ்மொழியில் எழுதப்படாததைப்பற்றி கேட்கும்போது ‘ நகரமைப்பு , ஊராட்சி மன்ற அனுமதி வாரியம் அனுமதியளிக்கவில்லை ‘ என்று கூறுவதும் , அதன்பின் நாம் சம்பந்தப்பட்ட நகரமைப்பு , ஊராட்சி மன்ற அனுமதி வாரிய பொறுப்பாளர்களிடம் சென்று விசாரிக்கும்போது , அவர்கள் சம்பந்தப்பட்ட இந்திய கடை தொகுதிகளில் விபரங்களை விபரத்தை சரிபார்க்கும்போது ‘ சம்பந்தப்பட்ட கடை முதலாளி , சொந்தக்காரர் சொல்வது , கூறுவது பொய் என்பது அறிய நேருகிறது . என் இந்த நிலை . பங்களாதேஷ், ஈரான், பாக்கிஸ்தான் நாட்டில் இருந்தது வந்த வெளிநாட்டு தொழிலார்கள் வைத்திருக்கும் கடைகளில் நம் தேசியமொழியுடன் சேர்ந்து தன் சொந்த நாட்டு மொழியினை விளம்பர பலகையில் பயன்படுத்தும்போது , நாம் , சொந்தமாக கடை வைத்து நம் இனத்தின் மூலமாக தன் வயின்றனை வளர்க்கும் கடை முதலாளி நம் மொழியினை பயன் படுத்தாதது என் ? என்ன காரணம் ? இதற்கான ஒரே வழி ” தன் மொழியினை விளம்பர பலகையில் பயன்படுத்தாத கடைகாரர்களின் கடைகளுக்கு நாம் செல்லாமல் இருப்பதும் , அவர்களின் பொருட்களை வாங்காமல் இருப்பதுமாகும் ” இதனை நான் மற்றும் எனது குடும்பம் உள்பட கடந்த சில வருடங்களாக செய்யப்பட்டு வருகின்றோம் . இதனை நமது தமிழ் உணர்வு ஆவர்லர்கள் செயல்படுத்த எனது இரு கைகளையும் உயர்த்தி தங்கள் முன் அடிபணிந்து மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி .
மணியம் அவர்கள் ஒருமைப்பாட்டு காரணமாக அனைத்து இந்தியர்களையும் தமிழர்கள் என்று கூறுகின்றார் .
முதுமை பெறாத வாதங்கள் .= நடப்பு சூழ்நிலை கருத்தில் கொள்ள வேண்டும் .= தமிழன் பழமை பேசியே செத்தான் .= பழமை போனது போனதுதான் .=தமிழன் நெஞ்சுரம் நிறைந்தவன் .= பல தோட்டங்கள் சூறையாடப்பட்டாலும் , தமிழனின் வாழ்வியல் சிறப்பானது . = நாம் இல்லாதவர்கள்தான் =.நாம் கொண்டாடும் பண்டிகைகள் யாரும் மிஞ்ச முடியாது = நாம் இந்நாட்டில் சிறுபான்மையாக இருந்தாலும் நம் சந்தோஷங்கள், குடிகள் , ஆர்ப்பாட்டங்கள், அளப்பரியது .= நமக்கு துரோகம் நினைக்கும் அரசு ஏஜெண்டுகளுக்கு காலம் பதில் சொல்லும் = நம் கடமை செவ்வனே போகட்டும் =
தயவு செய்து G .S .T க்கு ஓட்டு போடாதீர்கள் . இதை வளரவிட்டால் பத்து சதவீதம் நடைபோடும் .
மாற்றம் வேண்டும் நண்பர்களே. கருத்துக்கள் பலவிதமாக இருந்தாலும், நாம் இந்தியர்கள் ஒன்றாக இருந்து புதியதொரு அரசாங்கம் அமைந்திட வழி செய்ய வேண்டும். ஒரு கட்சியே 60 வருடங்கள் ஆட்சியில் இருந்தது போதுமே. இன்னுமா ஏமாளிகளாக இருக்க போகிறீர்கள். மாற்றம் ஒன்றே நமது தேவை.
திரு . சிவலிங்கம் அவர்களே உங்கள் கருத்தை தான் 1980 களில் தலைநகரில் வழியுறுத்தி இந்தியர் கடைகளில் ஏறி இறங்கினோம் ! ஒரு சில வெட்ரியும் கண்டோம் !! தலை நகர் கண்ணன் , தலை நகர் மணியம் மக்கள் மறந்திருப்பார்கள் ! நமது இயக்கங்கள் இதை ஒரு இலட்சியமாக எடுத்து செயல்பட வேண்டும் ! நான் தமிழன் ! என் தமிழ் மொழி ! என் மொழி வாழ நான் தான் என் மொழிக்கு உரம் இட்டு ! நீர் விட்டு வளர்க்க பாடு பட வேண்டும் என்ற எண்ணம் அணைத்து தமிழனின் எண்ணத்தில் தோன்றி விட்டால் தமிழ் மொழி நம் நாட்டில் தலைதூக்கும் ஆச்சி மொழியாக கூட அரசாங்கத்தால் அங்கீகரிக்க படும் .
தலை நகர் கண்ணன் பற்றி தமிழர்கள் யாவரும் அறிவர். தலைநகர் மணியம் என்பவர் யார்?