சிலாங்கூர் குடியிருப்பாளர்களில் 72 விழுக்காட்டினர் மாநில அரசின் செயல்பாடுகாளில் மனநிறைவு கொண்டுள்ளனர்.
மெர்டேகா மையம் ஜனவரி 23 தொடங்கி ஜூன் 29வரை 12,001 குடியிருப்பாளர்களிடாம் ஆய்வு மேற்கொண்டதாகவும் அந்த ஆய்வில் மேற்காணும் முடிவு கிடைத்ததாகவும் ஊராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இயான் யோங் ஹியான் கூறினார்.
“ஒட்டுமொத்தமாக பார்த்தால், மாநில அரசின்மீது மக்கள் கொண்டுள்ள திருப்தி மேம்பட்டுள்ளது”, என்று குறிப்பிட்ட இயான் 2015 ஆய்வில் 67 விழுக்காட்டினர்தான் மாநில அரசின்மீது திருப்தி தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டினார்.