மறைப்பதற்கு ஏதுமில்லை கருத்தரங்கு நடைபெற்ற மண்டபத்துக்குப் பாதுகாப்பு வழங்க போலீஸ் அழைக்கப்படவில்லை என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.
“மண்டபப் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பேற்கவில்லை. போலீஸ் அதிகாரிகள் மண்டபத்துக்கு வெளியில்தான் இருந்தனர். ஏனென்றால் அந்நிகழ்வுக்கு வருமாறு போலீசுக்கு அழைப்பு இல்லை.
“வெளியில் மட்டும் பாதுகாப்பைக் கவனித்துக் கொண்டோம்”, என காலிட் இன்று புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலமில் நடைபெற்ற அக்கருத்தரங்கம், பக்கத்தான் ஹராபான் அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது சில இளைஞர்கள் நாற்காலிகளையும் சுடரெரிகளையும் தூக்கி எறிந்து அமளி செய்ததால் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
கலகம் செய்த சிலரைக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களே பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். நேற்று, போலீசார் மேலும் சிலரைக் கைது செய்தனர். இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டேய் அரை வேக்காடு– கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ன செய்தார்கள்? முஸ்லிம்களுக்கு பிடிக்காவிட்டால் மற்றவர்கள் மாற வேண்டுமா? உன்போன்றோர் அறிவாளிகளாமாறுங்களேன்-பிறகாவது புரியும். உன்னைப்போன்ற ஈனங்களுக்கு என்றுமே பகுத்தறிவு புரியாது.
IGP மச்சானுக்கு பணம், பாக்கு, வெற்றிலையோடு அழைப்பிதழ் அனுப்பியிருந்தால், பரிவாரத்தோடு வந்து இறங்கியிருப்பார். பார்த்தீர்களா, மச்சான் கோபித்துக்கொண்டார். இப்போது என்ன செய்வது….? யாராவது சொல்லுங்களேன் !!!
அழைச்சிட்டாலும்…………..கிழிச்சிடுவீங்க!!!
நீதிமன்றம் கைது செய்ய சொன்னவனை இன்னும்தான் புடுங்கிகிட்டு இருக்கார்.
இந்த லட்சணத்துல அப்படியே இவரை அழைத்து இவர் வந்திருந்தாலும் உடனே புடுங்கி கத்தை கட்டி இருப்பாரா ? என்பதும் சந்தேகமே..