இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின், கோலாலும்பூர் சீ விளையாட்டுப் போட்டி சிறப்பு மலரில் இந்தோனியாவின் கொடி தலைகீழாக பதிவிடப்பட்டிருப்பதற்கு அக்குடியரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் இமாம் நஹ்ராவியிடம் மன்னிப்பு கேட்டார்.
“பாபாக் இமாம், தயை செய்து என் உளப்பூர்வமான மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
“அதில் எந்தத் தீய நோக்கமும் கிடையாது. தவற்றுக்கு உண்மையிலேயே வருந்துகிறேன்”, என கைரி நேற்றிரவு டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அவருக்கு முன்பே இமாம் அச்சம்பவம் குறித்து டிவிட் செய்திருந்தார். “ கவனக்குறைவாக” இந்தோனேசிய கொடி தலைகீழாக அச்சிடப்பட்டிருந்தது சீ விளையாட்டுப் போட்டிகளின் பிரம்மாண்டமான தொடக்க விழாவுக்கு ஒரு களங்கமாக அமைந்து விட்டது என்று அவர் கூறியிருந்தார்.
என்ன இருந்தாலும் பிரதமர் நஜிப், துணை பிரதமர் ஷாஹிட் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வந்தேறி மலாய்க்காரர் ஆனவர்களின் மூதாதையர்களின் நாடும், நமது அண்டை நாடுமான இந்தோனேசியாவை இப்படி அவமான படுத்தி இருக்கக்கூடாது.
இது கவனக்குறைவால் தவறு போன்று தெரியவில்லை, பிரதமர் நஜிப், துணை பிரதமர் ஷாஹிட் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வந்தேறி மலாய்க்காரர் ஆனவர்களை, திட்டமிட்டு அவமானப்படுத்தியதைப்போல் உள்ளது.