நான்காண்டுகள் போலீஸ் படைத் தலைவராக பணியாற்றிய இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், செப்டம்பர் 5-இல் 60-வயதாவதைத் தொடர்ந்து பணி ஓய்வு பெறுவார்.
“இது என் சொந்த முடிவு. ஓய்வுகொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது”, என காலிட் பெரித்தா ஹாரியானிடம் தெரிவித்தார்.
காலிட், 1976-இல், 19வது வயதில் போலீசில் சேர்ந்தார். பின்னர் அவர் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1995-இல் சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.
2013-இல் இஸ்மாயில் ஒமார் பணி ஓய்வு பெற்றதும் காலிட் ஐஜிபி ஆனார்.
காலிட்டுக்குப் பிறகு போலீஸ் படைத் துணைத்தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம், 59, புதிய ஐஜிபி-ஆக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிக்க நன்றி . தங்களின் அளப்பரியா சேவைக்கு மிக்க நன்றி , இதயம் கனிந்த நன்றி, வாழ்துக்கள் . அதேவேளையில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி திருமதி இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் ரிடுவான் அப்துல்லா ( Riduvan Abdullah ) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . அவர் எங்கு இருக்கிறார் ? உயிருடன் உள்நாட்டில் இருக்கிறாரா ? அல்லது வெளிநாட்டில் இருக்கிறாரா ? என்பது புரியாத புதிராக இருக்கின்றது .
சொந்த முடிவு என்றாலே ஏதோ உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது! ரிடுவான் அப்துல்லாவின் மகள் உள்ளூர் பள்ளியில் தானே படிக்கிறார்? எஙகேயாவது பள்ளிவாசலில் ஒளிந்து கொண்டிருப்பார்!
ஒரு எருமைக்கு ஓய்வு கொடுத்தாகி விட்டது.
அடுத்து வரப்போகும் எருமை எதுவோ ?