தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக், வாக்காளர்களில் பாதிப்பேர் இளைஞர்கள் என்றும் அவர்களின் ஆதரவு பிஎன்னுக்குத்தான் என்றும் நம்புகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கோலா கங்சார், சுங்கை புசார் இடைத்தேர்தல்களை வைத்து அவர் இம்முடிவுக்கு வந்துள்ளார். அவ்விரு தொகுதிகளிலும் பிஎன் கூடுதல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
“அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இளைஞர்கள்தான்”, என சாலே கூறினார்.
அவ்விரு தொகுதிகளிலும் இளம் வாக்காளர்கள் பிஎன் பக்கம் திரும்புவதைக் காண முடிந்தது.
பிஎன் ஒன்றுபட்டிருப்பதாலும் மக்களின் நலன், பொது ஒழுங்கு ஆகியவற்றைக் காக்கும் கொள்கைகளைச் செயல்படுத்தி வருவதாலும் பிஎன்மீது இளைஞர்களின் நம்பிக்கை பெருகி வருகிறது என்றாரவர்.