முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹித்தாமுக்கு 18 பேரின் உயிரை உறிஞ்சிய மெமாலி சம்பவத்தை விசாரிக்க அரச ஆணையம் அமைக்கப்படுவதில் ஆட்சேபனை எதுவும் இல்லை.
ஆனால், அரசியல்வாதிகள் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வதைத் தவிர்க்க, அந்த ஆர்சிஐ பொதுத் தேர்தலுக்குப் பின்னரே அமைக்கப்பட வேண்டும் என்றவர் கருதுகிறார்.
ஆர்சிஐ அமைக்க அவசரம் காட்ட வேண்டியதில்லை என்றாரவர்.