பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தொகுதியான பெக்கானில் திடீரென்று வாக்காளர் எண்ணிக்கை பெருக்கம் கண்டது எப்படி என மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
1999-இல் மற்ற இடங்களிலிருந்து வாக்காளர்கள் கொண்டுவரப்படாதிருந்தால் நஜிப் பெக்கானில் தோற்றிருப்பார் என்று கூறிக்கொண்ட மகாதிர், அப்படி மறுபடியும் நிகழலாம் என்றார்.
“பெக்கானில் 35,000 வாக்காளர்கள் இருந்தனர். அவர் தோல்வி கண்டிருப்பார், மற்ற இடங்களிலிருந்து வாக்காளர்கள் கொண்டுவரப்படாதிருந்தால்.
“அடுத்தடுத்த ஆண்டுகளில் வாக்காளர் எண்ணிக்கை 35,000-த்திலிருந்து 80,000 ஆக உயர்ந்தது. இத்தனை வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
“இந்தக் ‘கூடுதல் எண்ணிக்கைதான்’ கவலையளிக்கிறது. வரும் தேர்தலில் எண்ணிக்கை மேலும் கூடலாம். அஞ்சல் வாக்கு என்கிறபோது அதை மற்ற இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியும். அது இல்லையென்றால், அவர் தோற்பார்”, என மகாதிர் நேற்றிரவு கோம்பாக்கில் கூறினார்.
நமது சமூக பிள்ளைகளுக்கு I.C இல்லை !
ஆனால் பிலிப்பின்காரனுக்கு I.C வாரிவழங்கிய
வள்ளல் மகாதீர் !! ( SABAH PROJEK I.C )
நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்றுவரை
இந்தியர்களிடையே அடையாள ஆவண விவகாரம் ஒரு முடிவே
இல்லாத பிரச்சினையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கதை இப்படியிருக்க, அக்கரையில் சுற்றித்திரிந்த பிலிப்பின்
காரனை இக்கரைக்கு வருக,வருக என்று வரவேற்று I.C கொடுத்த
வள்ளல் மகாதீரை எப்படி புகழ்ந்தால் தகும் ? சபா ப்ரொஜெக் I.C
அல்லது ப்ரொஜெக் மகாதீர் ( PROJEK MAHATHIR ) என்று
அழைக்கப்பட்ட அந்த பரமரகசிய திட்டம், மிக உயர்மட்ட
அரசாங்க அதிகாரிகளோடு சேர்ந்து மகாதீரால் செயல்படுத்தப்பட்ட
ஒரு சூழ்ச்சிமிகுந்த ஏற்பாடு. இந்த ப்ரொஜெக் I.C. சபா மாநிலத்தில்
1981 ரில் இருந்து 1990 ஆம் அண்டு வரை 6 லட்சம் தென்
பிலிப்பின் நாட்டு இஸ்லாமிய மக்கள் குறிப்பாக சூலு ( SULU )
இனத்தவருக்கு வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சபா
மாநில மக்கள் தொகையில் 25 விழுக்காடு கடாசான் இனத்தை
சேர்ந்த கிருஸ்துவர்கள்தான் மாநில தேர்தல் வெற்றி
தோல்விகளை முடிவுசெய்பவராக இருந்தார்கள். இது மகாதீருக்கு
மிகவும் பிடிக்காத ஒரு விசயமாக இருந்தது. அவரை பொருத்த
வரை தேர்தல் முடிவுகள் இஸ்லாமியர்கள் கையில்
இருக்கவேண்டும் என்ற தீய நோக்கத்தினால் உருவானதே இந்த
சபா ஐ.சி ப்ரொஜெக் ! இதை படிக்கும் அன்பர்களே ! கடந்த பல
ஆண்டுகளாகவே தமிழ் நாளிதழ்களில் நமது சமூகத்தின்
அடையாள ஆவணங்கள் இல்லாத பிரச்சினைகளை பற்றி
சோகமான வேதனை தரும் தகவல்கள் வந்த வண்ணம்
இருக்கிறது ! ஆனால் இந்த கேடுகெட்ட மகாதீரால் ஓராயிரமோ
அல்லது ஈராயிரமோ அல்ல ! மாறாக 6 லட்சம் ஐ.சி. வந்தவன்
போனவனுக்கு எல்லாம் அள்ளிக்கொடுத்தா(ன்)ர். மகாதீர் செய்த
இந்த அடாது செயலால் இன்று சபா மாநிலமே தீவிரவாதிகளால்
நிறைந்து குட்டிச்சுவராய் போனது! அது மட்டுமல்ல, சபா
மாநிலத்துக்கு சம்மந்தமில்லாத வந்தேறிகளாகிய இந்த பிலிப்பின்
சூலு இனத்தவரால் அந்த மாநிலம் முழுதும் உள்ள அரசாங்க
அலுவலகங்களில் இவர்களே பெரும் பதவி வகிப்பவர்களாக
இருகிறார்கள் , ஆனால் இந்த நாட்டு முனேற்றத்துக்காக உழைத்த
நமது சமூதாயத்துக்கு அரசாங்க வேலையோ குதிரை கொம்பாகி
விட்டது. பாவம் ! முன்பு சபா மாநிலத்தில் 25 சதவிகிதம்
பெரும்பான்மை மக்களாக இருந்த கடாசான் இனத்தவர்கள்,
மகாதீரின் வஞ்சக செயலால் 17 சதவிகிதமாக சுருங்கி
பெரும்பான்மை மக்கள் என்ற தகுதியை இழந்தார்கள்.
தங்களிடம் இருந்து கற்றுக்கொண்டுள்ளார் எனலாம் . மிதமிஞ்சிய பங்கக்காரர்கள் இருப்பதால் தன் வெற்றி நிச்சயம் என்பது அவரின் நிலைப்பாடு .
TAPAH BALAJI சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தீபகற்ப மலேசியாவிலும் மகாதிமிர் மேற்கொண்ட இன அழிப்பு தெரியுமா தெரியாதா? 80 களில் வெளிநாட்டிலிருந்து இங்கே உள்ள தோட்டப் புறங்களில் 5 க்கும் 10 க்கும் கொண்டு வந்து குவிக்கப் பட்டனர், இந்தோனேசியர்களும், வங்காளதேசிகளும். ஏழெட்டு பிள்ளைகளுக்கு குறைவில்லாமல் தோட்டப்புறங்களில் பெற்றெடுத்த இந்தியர்கள், வெளிநாட்டவர்களின் தொல்லைகளை தாங்க முடியாமல், நகர்ப்புறங்களில் ஆற்றோரங்களிலும், சாலையோரங்களிலும் புறம்போக்கு நிலங்களில் குடிபுகுந்தனர். போதுமான வேலைகள் கிடைக்கப் பெறாமல், சிறு சிறு Besi Buruk போன்ற தொழிலை செய்துகொண்டு , இரண்டு பிள்ளைகளோடு நிறுத்திக் கொண்டு அன்றாட வாழ்வுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். தலைக்கு மேல் சமூகப் பிரச்சினைகள். 50 களில், 60 களில் அரசுத் துறைகளிலும், தோட்டப் புறங்களிலும் செழிப்பாக வாழ்ந்த நம் மக்கள், ரசாக் ஆட்சியிலும், மகாதிமிர் ஆட்சியிலும் சீரழிந்தனர்.
இந்திய வம்சாவளி மலாய்க்காரரான மகாதீரே
இந்த குறும்புதான் வேண்டாம்கிறது.
மற்ற இனத்தவர்கள் நாம் இருவர் நமக்கு இருவர் என்று இருக்கும்போது,
இந்நாட்டிற்கு வந்தேறி மலாய்க்காரர் ஆனவர்கள்
நாம் ஐவர் நமக்கு பதினைந்து பேர் என்ற கொளகையை விடா பிடியாக கடைபிடிக்கும்போது,
மக்கள்தொகை பெருக்கம் எப்படி வந்தது ? என்று
இந்திய வம்சாவளி மலாய்க்காரரான நீங்களே இப்படியெல்லாம் உங்கள் இனத்தை நையாண்டி பண்ணுவது ஓவரா தெரியலை.