பணிஓய்வு பெறும் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மரியாதை நிமித்தம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை இன்று புத்ரா ஜெயா சென்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
காலிட், 40 ஆண்டுகள் போலீஸ் படையில் பணியாற்றிவிட்டு செப்டம்பர் 5-இல் பணி ஓய்வு பெறுகிறார். ஒப்பந்த ஊழியராக அவரது பணிக்காலத்தை நீட்டிக்க அவர் விரும்பவில்லை.
அவர், 1976-இல் முதன்முதலாக போலீசில் சேர்ந்தார். அதன் பின்னர் நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகியவற்றின் தலைமை போலீஸ் அதிகாரி, புக்கிட் அமான் சிஐடி துணை இயக்குனர் எனப் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.
2010-இல் புக்கிட் அமானில் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு இயக்குனராகவும் 2011-இல் துணை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீசாகவும் நியமிக்கப்பட்டார்.
சிரம்பானில் பிறந்தவரான காலிட், 2013, மே 17-இல் இஸ்மாயில் ஒமார் பணிஓய்வு பெற்ற பின்னர் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் ஆனார்.
eppo என்று ஒரு தடவை சொல்லு உனக்கு ரவை ரெடிடி மச்சி