ஒரு மலேசியக் குடிமகன் 21 ஆவது வயதை அடைந்தவுடன் அவர் தானாகவே வாக்காளர் ஆகிவிட முடியாது. அவ்வாறான வாக்காளர் பதிவு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று பிரதமர்துறை அமைச்சர் அஸலீனா ஓத்மான் சைட் கூறுகிறார்.
வாக்களிக்களிக்கும் வயதை எட்டியவரை தானாகவே வாக்காளராக்கும் பதிவுமுறை மற்றும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்குதல் ஆகிய திட்டங்கள் ஏதும் அரசாங்கத்திடம் இருக்கிறதா என்று பிகேஆர் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் கேட்டிருந்த கேள்விக்கு அஸலீனா இவ்வாறு பதில் அளித்தார்.
அரசமைப்புச் சட்டம் பிரிவு 119 தின்படி, 21 வயதை எட்டிய மற்றும் வாக்காளராவதற்கான தகுதி எதனையும் இழக்காத ஒரு மலேசிய குடிமகன், ஒரு வாக்காளராக பதிவு செய்யப்படுவதற்கு மனு செய்ய வேண்டும் என்று அஸ்லீனா விளக்கமளித்தார்.
எனினும், இது போன்ற நடவடிக்கை அமலாக்கம் செய்யப்பட வேண்டுமென்றால், இப்போது இருக்கும் சட்டவிதிகளுக்கு திருத்தம் கொண்டுவருதற்கு முன்னர் இது குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்பட வேன்டும் என்றாரவர்.
கடந்த மார்ச்சில், இவ்வாறான “ஆட்டோமேட்டிக்” வாக்காளர் பதிவு முறையை அமல்படுத்த மலேசியா தயாராக இல்லை என்று தேர்தல் ஆணையத் தலைவர் முகமட் ஹாசிம் அப்துல்லா கூறியிருந்தார்.
adiye–எவ்வளவோ சட்டங்களை உங்களுக்கு சாதகமாக மாற்றிவிட்டிர்கள் -இதையா மாற்ற முடியாது?
தெரியும் டி — திருட்டு நாதாரிகள்
…..பேசறா இந்த பபொக்
இந்தோனேசியாவிலிருந்து வந்தேறி மலாய்க்காரராகி மலேசியாவின் வாக்காளராகுவது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல,
அதேபோல் வங்காளதேசத்திலிருக்குந்து நாட்டிற்குள் படையெடுத்திருக்கும் வங்காளதேசிகளுக்கு இந்தோனேசியாவிலிருந்து வந்தேறி மலாய்க்காரரானவர்களின் பெண்களை திருமணம் செய்து வைத்து, அடையாள அட்டை வழங்கி, வங்காளதேச மருமகன்களை வாக்காளராக்குவது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல, என்று கூறும் அஸலீனா அறிவித்தாலும் ஆச்சர்யம் இல்லை.
நீ ஆனா இல்ல பெண்ணா ,,,,,இல்ல ரெண்டும் கேடடானா ?………….
மலேசியால் தேர்தலில் வெற்றிபெற்றால் பகுத்தறி இல்லாத, பேசதெரியாத, நற்சிந்தனை இல்லாத , ஆங்கிலம் பேசதெரியாத, அரசியல் கண்ணோட்டம் தெரியாத யாரும் அமைச்சர் ஆகலாம் என்பதற்கு இவர் ஓர் உதாரணம் . நாடு உருப்படுமா ? இறைவா நாட்டையும் , மக்களையும் காப்பாற்றுவாயாக .