எதிர்வரும் 14 ஆவது பொதுத்தேர்தலில் மைபிபிபி கட்சி தலைவர் எம். கேவியஸ் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறுகிறார்.
“நான் போட்டியிடப் போகிறேன் (ஏனென்றால்) நான் கேமரன்மலையைத் தவிர வேறு எங்கும் போகப் போவதில்லை. எந்த டிக்கெட்டில் என்று எனக்குத் தெரியாது…பாரிசான் நேசனல் (பிஎன்) எனக்கு டிக்கெட் கொடுக்கவில்லை என்றால், நான் எனது சொந்த டிக்கெட்டில் போட்டியிடுவேன்”, என்று கேவியஸ் மலாக்காவில் 17வது மலாக்கா மைபிபிபியின் மாநாடு தொடங்கி வைக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அம்மாநாட்டை மலாக்கா முதலமைச்சர் இட்ரீஸ் ஹருன் தொடங்கி வைத்தார். மைபிபிபியின் உதவித் தலைவர் எம். காந்தியும் மாநில மைபிபிபி தலைவர் சியு தியாங் சாய்யும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
போகுவரத்து அமைச்சின் ஆலோசகருமான கேவியஸ், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கேமரன்மலை மக்களுக்கு அவரது சேவையைத் தொடங்குவதற்கு முன்னர், பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் “அனுமதி”யைக் கேட்டிருந்ததாக கூறினார்.
முன்னதாக, இத்தொகுதியில் மஇகா போட்டியிடும் என்று அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் வலியுறுத்தியாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஐயா நீங்க தான் உண்மையான அரசியல்வாதி,,,உண்மையான தலைவன். நீர் ‘எங்கு’ வேணுமானாலும் நிக்கலாம். 5-வருஷத்துக்கு முன் உங்களை இப்படி பார்த்தது உங்களைப் பற்றிப் படித்தது. அதன் பிறகு மருத்துக்குக் கூட பத்திரிகையில் கூட உங்களைப் பார்த்தது இல்லை. உங்களைப் பற்றிப் படித்ததாகக் கூட நினிவு இல்லை. எனவே, நீங்க தான் உண்மையான அரசியல்வாதி,,, உண்மையான தலைவன். நீர் ‘எங்கு’வேணுமானாலும் நிக்கலாம். நீர் ‘எங்கு’வேணுமானாலும் நிக்கலாம்.!
வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு போய் வாக்காளர்களை சேர்த்து வைத்திருக்கிறார். இவர் தான் உண்மையான அரசியல்வாதி!
ஹா ஹா ஹா
தேர்தல் காலங்களில், இந்த நண்டு குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவந்து தலைகாட்டும். மக்களின் வரிப்பணத்தை விழுங்கும் மற்ற ஜீவன்களைப்போல் தானும் உண்டுகொழுக்க ஏதாவது கிடைக்கும் என்ற பேராவல்தான் !
அறியாத மக்களின் அடையாள கார்டை அவர்களுக்கு தெரியாமல் கொண்டு கேமரன் மலையில் பதியிகிறார் நாத்த வேலைய செய்கிறார்
கேவியஸ் ஒர் விளையாட்டு பிள்ளை எங்கு வேண்டும் என்றாலும் குதித்து விளையாடுட்டுமே…..
தம்பி கேவிஎஸ்ஸுக்கு மிக்க நன்றி. அல்தான்துயா நஜிப்பை குழப்பி விட்டார். கேமரன் மலை விஷயத்தில் இப்போது நஜிப் முழி பிதுங்குகிறார். கேமரன் மலையில் அம்னோ போட்டியிடவேண்டும் என்பது நஜிப்பின் திட்டம். அதற்காக கேவியெஸ்ஸிடம் சில சில்லறைகளை கொடுத்து கேமரன் மலையில் போய் வேலை செய்யச் சொன்னார், நஜிப். கேவியெஸ்ஸும் இரண்டாண்டுகளாக மலையில் நன்றாகவே குட்டிக்கரணம் போட்டார். இதனால் ம.இ.கா. விற்கு எரிச்சல். கேவியெஸ்ஸும், ம.இ.கா. வும் மோதிக் கொண்டன. இதைத்தான் நஜிப் எதிர்பார்த்தார். கேவிஎஸ்ஸிற்கும் ம.இ.கா. விற்கும் இருக்கும் தகராறை சுட்டிக் காட்டி, அம்னோவிற்கு கேமரன் மலையை கொடுத்துவிடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த நஜீப்பிற்கு, கேவிஎஸ்ஸின் தற்போதைய முடிவு, நஜீப்பிற்கு பேரிடி. தற்போதைய சூழலில் ம. இ.கா. விற்கு தான் அந்த தொகுதியை நஜிப் கொடுத்தாக வேண்டும். கேவிஎஸ்ஸின் இம்முடிவினால் நஜிப் நிலை குழைந்து போயுள்ளார். நன்றி கேவிஎஸ் . ஆனாலும், இந்த கேவிஎஸ் பக்கா சூழ்ச்சிக்காரர். வேறேதேனும் திட்டம் உண்டா என்பது தெரியவில்லை. பாரிசானில் சீட் கிடைக்கவில்லை என்றாலும், கேவிஎஸ் கேமரன் மலையில் போட்டியிடும் துணிச்சல் உண்டா? என ம.இ.கா.வும், டி ஏ.பி.யும் இவருக்கு சவால் விட வேண்டும்.
கேமரன் மலையில் பிறந்தேன் ! வளர்ந்தேன் ! விவசாயம் பார்த்தேன் ! என்பதெல்லாம் கிடக்கட்டும் ! கேமரன் மலையில் உள்ளவர்கள் உமக்கு ஓட்டு போடுவார்களா என்று பாப்போம் ! இவர் யார் ! இவரின் தகுதி என்ன இவரை அங்கீகரிக்கலாமா ! கேமரன் மலை மக்களே முடிவு செய்யட்டும் ! முதலில் இவருக்கு சீட்டு கிடைக்கிறதா என்று பார்ப்போம் ! தனித்து போட்டியிடுகிறார் என்றால் ! கட்சியை கலைத்து விட வேண்டியதுதானே ! அவரின் கட்சி தனி மனித கச்சிதானே ! மகாதீர் ஆட்சியில் இல்லை இப்படி பேசியதற்கு பாரிசானில் இருந்து தூக்கி இருப்பார் இன்னேரம் !! அவரின் எல்லா பதவிகளையும் புடிங்கி இருப்பார் ! பாவம் நஜிப் சொந்த பிரச்சனையால் இவனையெல்லாம் பார்க்க நேரமில்லை ! ஆமாம் இவன் தமிழனா ! தேர்தலில் வெட்ரி பெற்று பதவியில் இருந்த போது கூட இவனால் எந்த தமிழனுக்கும் எந்த புன்னியமும் கிடையாது ! இவனெல்லாம் தேர்தலில் நின்றாள் என்ன ! தோத்தால் என்ன! நம் சமுதாயத்திற்கு எந்த நன்மையையும் கிடையாது இழப்பும் கிடையாது ! இவனையெல்லாம் ஓரம் கட்டி விட்டு ! உருப்படும் வேலையை பார்ப்போம் !!
பொட்டை கோழி கூரையேறி கூவுது.
மைபிபிபி VS மஇகா
சபாஷ் !!! சரியான போட்டி !!!
இனி கேமரன்மலை வாழ் இந்தியர்கள் TIME PASS பண்ண அங்கே இங்கே என்று அலைய வேண்டியதில்லை.