41 ஆண்டுகள் போலீஸ் படையில் பணியாற்றிவிட்டு பணிஓய்வு பெறும் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், போலீஸ் படையில் இயன்றவரை சிறப்பாகப் பணியாற்றி வந்துள்ளதாக பெருமையுடன் கூறினார்.
“மிச்சம்மீதியாக எதையும் விட்டு வைக்கவில்லை”. காலிட் இன்று காலை கோலாலும்பூரில் பணி ஒப்படைப்பு நிகழ்வில் உரையாற்றினார்.
புதிய போலீஸ் படைத் தலைவர் இதுவரை பதவி சிறப்புப் படைப் பிரிவுத் தலைவராக இருந்துவந்த முகம்மட் புசி ஹருன். புசி போலீஸ் படையை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார் என்று நம்புவதாக காலிட் கூறினார்.
காலிட், தமக்கு ஆதரவு கொடுத்து வந்த உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடிக்கு நன்றி தெரிவித்தார்.
விசுவாசத்துடன் பணியாற்றி வந்திருப்பதாகக் கூறிய காலிட், “விசுவாசத்துடன் பணியாற்றினால் , இன்ஷாஅல்லாஹ், வெற்றி நமக்குத்தான்”, என்றார்.
“இயன்றவரை விசுவாசத்துடன்” உழைத்தவரை பத்தாம் தேதி முதல் மலேசியா மறந்து விடும். அதற்கப்புறம் அவர் யாரோ? நாம் யாரோ!
ஹா ஹா ஹா!
டேய் மடையா அது மற்றவர்கள் சொல்ல வேணும்டா. நீ பண்ணிய அநியாயத்திற்கு உனக்கு கிடைக்க வேண்டியது பாராட்டுகள் இல்லை. ஆண்டவன் ஒருவன் இருந்தால் உன்னைப்போன்ற நாதாரிகளுக்கு தக்க பலன் கிடைக்கும்.
மலேசிய மக்களுக்கு நன்றி சொல்லவில்லை . தனக்கு சோறு போட்டது மக்கள் பணம் என்பதை மறந்துவிட்டார் .
இயன்றவரைஅம்மோவுக்கு விசுவாசமாக
பணியாற்றியுள்ளேன்,இயன்றவரை
தடுப்பு காவல்கைதிகளின்கதையை
முடித்துள்ளேன்,அம்னோஅதிகாரத்திலிர்ந்த
ஒருபேச்சாளரை இழந்து கண்கலங்குது!
நம்ப சொல்கிறாயா? மடையா, எங்கே பத்பநாதன்?
இயன்றவரை அம்னோ போட்ட எலும்பு துண்டுக்கு நாய்ப்போல் நன்றியுணர்வுடன் அம்னோவுக்காக சிறப்பாக பணியாற்றியுள்ளேன் பெருமிதத்தில் இருக்கிறார்போலும் காலிட்.
மக்கள் தங்களை மறப்பதும் அல்லது நினைவில் கொள்வதும், தங்களின் விசுவாசத்தை பொறுத்தது ….