முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) காலிட் அபு பக்கார், ப்ராசரனா பெர்ஹாட் மலேசியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய போலீஸ் படைத் தலைவராக இருந்த காலிட் 60-வயதானதை அடுத்து பணி ஓய்வு பெற்றார்.
பணி ஓய்வு பெற்ற அவர் ப்ரசரனா தலைவராக நியமிகப்பட்டிருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். முன்பு ப்ராசரனா தலைவராக இருந்த இஸ்மாயில் ஆடம் பதவிக்காலம் முடிந்து வெளியேறியதை அடுத்து காலிட் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
“அது தவிர, பயங்கரவாதம், தீவிரவாதம், மனிதக் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்துலகச் சமூகத்துடன் உறவுகளை மேம்படுத்திக்கொள்வதற்கான சிறப்புத் தூதராகவும் காலிட் நியமிகப்பட்டுள்ளார்”, என்று நஜிப் கூறினார்.
அல்தான் தூயா நம்பிக்கை நாயகன் நாஜிபு நக்கிக்கு எலும்பு துண்டு.
நல்ல பேரம்!
தன் ஏவல்களையெல்லாம் சிரமேற்கொண்டு பணியாற்றியதற்கு, இலஞ்சமாக பதவியைப் பரிசளித்திருக்கிறார். “செருப்புத்”தூதர் என்ற பெயரில், மக்களின் வரிப்பணத்தில் கொழுத்த சம்பளம். பணி ஓய்வு என்றால் என்ன ? விளங்கவில்லை …..!!!
இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா!
ஏதோ ஒரு வகையில் திருடுவதற்கு ரோடு போட்டு கொடுத்தாச்சு.
இனி என்ன ப்ராசரனா பெர்ஹாட் மலேசியா மூடுவிழாவை நோக்கி பயணிக்க வேண்டியதுதான்.