பெர்சே முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனைக் குறைகூறிய பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கண்டனத்துக்கு ஆளானார்.
பெர்சே செயலகத்தின் மேலாளர் மந்திப் சிங், பாண்டான் எம்பி-இன் குறைகூறல்களுக்காக அவரை டிவிட்டரில் சாடினார்.
“நான் அறிந்தவரை அம்பிகா மக்களை பிஎச்(பக்கத்தான் ஹரபான்)-சுக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டதே இல்லை. உங்களை (ஹரபான்) அவர் குறைகூறுகிறார் என்றால் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான்.
“அவர் உங்கள் உள்கட்சி விவகாரங்களில் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டுகிறீர்கள். அவரை பிஎச் எதிரி என்கிறீர்கள். இதற்குப் பொருள் என்ன?”, என்று மந்திப் வினவினார்.
தேசிய மனித உரிமைக் கழகத் தலைவரான அம்பிகா, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிரணியினர் வெளிப்படையாக வாய்ச்சண்டையில் ஈடுபடுவதை கண்டித்ததைத் தொடர்ந்து நடுநிலை வகிக்க வேண்டிய ஒருவர் அப்படிக் கண்டனம் தெரிவித்தது முறையாகுமா என்று ரபிசி கேள்வி எழுப்பியிருந்தார்.
அம்பிகாவின் கருத்து நியாயமற்றது, பாரபட்சமானது, தவறான தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாரவர்.
“எனக்கு இது வியப்பளிக்கவில்லை. பக்கத்தான் ஹரபான் அமைக்கப்பட்டதிலிருந்தே அவர் அதற்கெதிராகத்தான் செயல்பட்டு வந்துள்ளார்”, என்று ரபிசி கூறினார்.
ரபிசி அவரின் எதிரிகளுக்குச் சாதகமாக அம்பிகா பேசுவதாகக் கூறுவதை மந்திப் நிராகரித்தார். மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்க முடியாதவர் ரபிசி என்றவர் சாடினார்.
அவரைப் போன்றே வழக்குரைஞரும் சமூக ஆர்வலருமான ஷியாரெட்ஸான் ஜொஹனும், தொடக்கத்திலிருந்தே அம்பிகா ஹரபானை எதிர்த்து வந்ததாக ரபிசி கூறுவதை மறுத்தார்.
அது “மிகவும் அபத்தமான கருத்து” என்று டிவிட் செய்த அவர், “நண்பர்களை எதிரிகளாக்கிக் கொள்ளாதீர்கள்” என்றார்.
பாஸ் கட்சியுடன் பேச்சுகள் நடத்துவதா, கூடாதா என்ற விவகாரம் பிகேஆரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. அது குறித்து கட்சிக்குள் மட்டுமல்லாமல் கட்சிக்கு வெளியில் விவாதிக்கப்படுகிறது.
ரபிசியைப் பொறுத்தவரை, பேச்சுகளை நிறுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவராக இருக்கிறார். பக்கத்தான் ஹரபான் மும்முனைப் போட்டிகளுக்குத் தயாராக வேண்டும் என்பது அவரது வாதம்.
கடந்த வாரம் மலேசியாகினியிடம் பேசிய அம்பிகா, மும்முனைப் போட்டி என்றால் 2008-இலு 2013-இலும் ஆளும் கட்சிக்குக் கிடைக்காமல் போன மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை திரும்பவும் கிடைத்து விடும் என்று கூறியிருந்தார்.
தோலுதான் வெள்ளை,எத்தனை வாசனை
சோப்பு போட்டுதோய்த்தாலும் பிலாச்சான்
வீச்சம்தாங்கமுடியாது!
அம்பிகா சொன்ன கருத்தை இவர்கள் புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறார்கள் !! உங்கள் கூட்டணியில் இந்தியர்களின் பிறநிதித்துவம் இல்லை என்று கூறினாரே அதற்கு என்ன பதில் !! உங்கள் கூட்டணி வெட்ரி பெட்ரால் எத்தனை இந்திய தலைவர்கள் மந்திரியாக இருப்பார்கள் ! துணை பிரதமர் பதவி கிடைத்துவிடுமா ! மகாதீர் ஒரு காலத்தில் சொன்னதுபோல் யார்வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்று !! லிம் கிட் சியாங் , பிரதமர் ஆகி விடுவாரா !! வேதமூர்த்தி மகாதீரை சந்தித்ததினால் துணை பிரதமர் ஆகி விடுவாரா !! எதிர் கட்சியோ ! ஆளும் கட்சியோ !! எங்களையெல்லாம் மேலே வர விட்டு விடுவீர்களா !! நாங்கள் எப்போதும் உங்களுக்கு வாலாட்டும் நாய்கள் தானே !! உங்களின் அடி வருடிகள் தானே ! நீங்கள் திருடுவதில் கொஞ்சம் பிச்சை போட்டால் ! வாழ்க என்று கோசம் போடுவோம் !! உங்கள் கைகளை முத்தம் இட்டு கேக் ஊட்டி விடுவோம் !! தானை தலைவனின் அடிமை கூடாரத்தில் பயிற்சி பெற்ற பச்சோந்திகள் நாங்கள் !!
இருவரும் மக்களுக்கு குரல் கொடுக்க கூடியவர்கள். மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருவருக்கும் உண்டு. இதில் யார் கண்டனதுக்கு உரியவர்கள் தெரியவில்லை. இருப்பினும் சிறந்த இந்த இரண்டு தலைவர்கள் என்ன கூறினாலும் அது மக்களுக்கு சமூக சேவையாகவே எடுத்து கொள்வோம். இருவரும் பணம் பதவி அடிமையானவர்கள் இல்லை. அப்படி பணத்துக்கு அடியாமையானவர்கள் என்றல் எப்போதே இருவரும் பணம் பதவிக்கு திசைமாரி போய் இருப்பார்கள்.
அலை ஓசை
முன்பு ஒருமுறை எழுதிவிட்டேன். மீண்டும் ஞாபகத்திற்கு,
அம்னோவில் இருந்து பிரிந்தவர்கள் எதிர்கட்சி ஆனாலும் அவர்களின் எண்ணம்/மனப்பக்குவம் இன்னும் அம்னோவையை பிரதிபலிக்கிறது.