முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அன்னிய செலாவணி வணிகம் நடைபெறும் இடத்துக்கு வந்ததே இல்லை என மத்திய வங்கிக்காக போரெக்ஸ் வணிகம் செய்த முன்னாள் வணிகர் ஒருவர் கூறினார்.
1980-இலும் 1990 முற்பகுதியிலும் மத்திய வங்கிக்கு ஏற்பட்ட வெளிநாணயச் செலாவணி இழப்பு குறித்து விசாரணை செய்யும் அரச ஆணையத்திடம் 1988க்கும் 98க்குமிடையில் வெளிநாணயச் செலாவணி வணிகம் செய்து வந்த அஸ்மான் மாட் அலி இன்று சாட்சியம் அளித்தார்.
அவரிடம் ஆர்சிஐ உறுப்பினர் சாவ் சூ பூன், முக்கிய பிரமுகர்கள் அல்லது அப்போதைய பிரதமர் அவரைப் பார்க்க வந்ததுண்டா என்று வினவினார்.
“யாரும் வந்ததாக நினைவில்லை”, என அஸ்மான் கூறினார்.
பின்னர் மகாதிரின் வழக்குரைஞர் முகம்மட் ஹனிப் கத்ரி, மகாதிர் வெளிநாணய வணிகம் நடைபெறும் இடத்துக்கு வந்திருக்கிறாரா என்று கேட்டார்.
“வந்ததே இல்லை”, என்றார் அஸ்மான்.