நேற்று செங்கடலின் வடக்குக் கரையோரத்துக்கு அப்பால், மூழ்கும் நிலையில் இருந்த ஒரு சுற்றுலா படகிலிருந்து எட்டு எகிப்தியர்களையும் ஒன்பது மலேசியர்களையும் எகிப்திய கடற்படை காப்பாற்றியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்தது.
கடலில் மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து அபய அழைப்பு வந்ததை அடுத்து கடல்படை விரைந்து சென்று அந்த 17பேரையும் மீட்டதாக இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
“இன்னும் ஒரு எகிப்தியரைக் காணவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம்”, என்றாரவர்.
-பெர்னாமா