பிரதமர் நஜிப்பை தரக்குறைவாக பேசியதற்காக ஒரு சரவாக் டிஎபி உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
சரவாக் டிஎபி தலைவர் சோங் சிஎங் ஜென்னின் உதவியாளர் அப்துல் அசிஸ் இசா பீனல் சட்டம் செக்சன் 504 மற்றும் மலேசியன் தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் சட்டம் செக்சன் 233 (1) (a)இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நஜிப்பைப் பற்றி மனதுக்குப் பிடிக்காத கருத்தை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார் என்பது குற்றச்சாட்டாகும்.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அசிஸூக்கு ரிம50,000 அபராதம் அல்லது ஒரு வருடத்திற்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த அஜீஸ் ஒரு ஏமாந்த சோணகிரி போலும். உண்மைகளை பேசிவிட்டதால், மாட்டிக் கொண்டார். சென்ற வாரம், ஒரு முன்னாள் வங்கி அதிகாரி, அல்தான்துயா நஜிப்பை, Malaysian Crook என்றார். இந்த அதிகாரிக்கு எவ்வளவு திமிர் பாருங்க. நம் நாட்டு சட்டங்களின்படி ‘உண்மை விஷயங்களை’ வெளியே சொல்லமாட்டோம். இந்த அதிகாரிக்கு என் இந்த வீண் வேலை. இந்த அதிகாரியையும் கைது செய்து விடுவார்களோ?