முன்னாள் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் முகம்மட் முகம்மட் தாயிப் மீண்டும் அம்னோவுக்கு திரும்பி வந்துள்ளதை பிரதமர் நஜிப் இன்று அறிவித்தார்.
அம்னோ தலைவர்கள் புடைசூழ்ந்திருக்க இந்த அறிவிப்பை கோலாலம்பூரில் அம்னோ தலைமையகத்தில் நஜிப் செய்தார்.
மாட் தாயிப் என்று அழைக்கப்படும் முகம்மட் 2013 ஆண்டில் பாஸ் கட்சியில் சேர்வதற்காக அம்னோவிலிருந்து வெளியேறினார்.
பின்னர், அவர் பாஸ் கட்சியிலிருந்து விலகி 2015 ஆம் ஆண்டில் பிகேஆரில் சேர்ந்தார்.
இதை அறிவிப்பதற்காக பிரதமர் நஜிப் நாடுமுழுவதிலுமுள்ள அம்னோ தலைவர்களை கோலாலம்பூருக்கு அழைத்திருந்தார்.
பொதுத்தேர்தல் நெருங்கிவிட்டதால், அல்தான்துயா நஜிப்பின் வியாபாரம் சூடு பிடிக்கிறது. மாட் தாயிப் என்ன விலைக்கு போயிருப்பார்?
சிரிப்பான அரசியல் இவ்வகை மடைமாற்றத்தால் மேலும் சிறப்படைகின்றது!
ஒரு யோக்கியனை வரவேற்கலாம். ஆனால்……!
CASH IS KING எல்லா தருத்திரத்தையும் அம்னோவில் சேர்ப்பது அம்னோ அழிவின் உச்சியில் இருப்பதாக அர்த்தம்.