அன்னிய செலாவணி வணிகத்தில் பேங்க் நெகாராவுக்கு ஏற்பட்ட பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட அரச ஆணையத்தின் நடவடிக்கைகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன.
வியாழக்கிழமை அதன் நடவடிக்கைகளை முடித்துக்கொள்ள முன்பு திட்டமிடப்பட்டிருந்தது.
எட்டாவது நாளான இன்று விசாரணைகள் முடிவுக்கு வருவதாக ஆர்சிஐ தலைவர் முகம்மட் சிடிக் ஹசான் கூறினார்.
ஆணையத்திடம் 25பேர் சாட்சியம் அளித்தார்கள், 42 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
“ஆர்சிஐ தலைவர் என்ற முறையில், விசாரணை நடத்திய அதிகாரிகள், விசாரணைகளைக் கண்காணித்த வழக்குரைஞர்கள், சாட்சியமளித்த சாட்சிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
“ஆணையர்கள் சாட்சியங்களையும் ஆவணங்களையும் ஆராய்ந்து பேரரசரிடம் ஆணையத்தின் பரிந்துரைகளைத் தாக்கல் செய்வார்கள்”, என்று சிடிக் கூறினார்.
இவ்வளவு நாட்கள் என்ன இவன்கள் புடுங்கி கொண்டிருந்தான்கள்? எல்லாம் அரசியல் நாடகம் – இயக்குனர் நம்பிக்கை நாயகன் அல்தான்துயா