வியாழக்கிழமை கம்போங் டத்தோ கிராமாட் சமயப் பள்ளிக்குத் தீவைக்கப்பட்ட சம்பவத்தில் கைதான ஏழு இளைஞர்களின் நிலை விசாரணைக்குப் பின்னரே முடிவு செய்யப்படும் என்று இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) முகம்மட் ஃபுசி ஹருன் கூறினார்.
“இரசாயனத் துறை, தீயணைப்பு மீட்புத் துறை அறிக்கைகளுக்காகவும் வேறு சில அறிக்கைகளுக்காகவும் காத்திருக்கிறோம்”, என ஃபுசி கூறினார். அவர், நேற்று புத்ரா ஜெயாவில் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற தாபிஸ் பள்ளிகள் பணிக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம் விசாரணைக்காக ஏழு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11-க்கும் 18-வயதுக்குமிடைப்பட்ட ஏழு இளைஞர்களும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்களா என வினவப்பட்டதற்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.
பிள்ளைப் புறக்கணிப்பு என்ற வகையில் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு ஐஜிபி பதிலளிக்க மறுத்தார்.
“நாங்கள் ச ட்டத்துறைத் தலைவருடன் முதலில் விவாதிக்க வேண்டும். என் அதிகாரிகள் விசாரணையை முடிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்”, என்றார்.
சமயப் பள்ளி சட்ட விரோதமாக செயல் பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
அரசாங்கம் செய்ய தவறிய கடமைகளை மற்றவர்கள் நிறைவேற்றினால் தவறா ?
என்ன உலகமடா இது ?
அரசு யந்திரம் என்ன புடுங்கி கொண்டிருந்தது? எல்லாமே அம்னோ மயம் எப்படி செயல்படும்? நீ என் முதுகை சொறி நான் உன்னுடை முதுகை சொறிகிறேன் என்பது இது தானே?