அது வேண்டுமென்றே வைக்கப்பட்ட தீ: தீயணைப்பு, மீட்புத் துறை உறுதிப்படுத்தியது

fireகடந்த  வாரம்   23பேரின்  உயிரைக்  குடித்த   தீச்சம்பவம்  நிகழ்ந்த    தாபிஸ்   சமயப்  பள்ளியின்  மூன்றாவது  மாடியில்  காலணி   அடுக்கு,  சுவர்கள்   முதலியவற்றில்   பெட்ரோல்  விசிறியடிக்கப்பட்டிருந்தது .

“தீ  கூரைக்குப்  பரவி   மூன்றாவது   மாடிக்  கதவும்   பற்றி   எரிந்திருக்கிறது.

“தீ  விரைவாக  பரவியதற்கு   இரண்டு   எல்பிஜி  கலன்களிலிருந்து   வெளியான  எரிவாயு   முக்கிய    காரணமாகும்”,  என  தீயணைப்பு,  மீட்புத்   துறை   தலைமை   இயக்குனர்   வான்  முகம்மட்   நோர்  இப்ராகிம்   இன்று   புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்   கூட்டமொன்றில்   கூறினார்.

இவற்றின்  அடிப்படையில்   விசாரணையாளார்கள்  அது   “வேண்டுமேன்றே   வைக்கப்பட்ட   தீ”   என்ற  முடிவுக்கு   வந்திருப்பதாக     அவர்   சொன்னார்.