மாட் தயிப் வெளியேறியதில் ஆச்சரியமில்லை

nurமுன்னாள்  சிலாங்கூர்   மந்திரி   புசார்   முகம்மட்  தயிப்  முகம்மட்    பிகேஆரிலிருந்து  வெளியேறுவார்   என்பது   அவர்   வெளியேறுவதற்கு    ஐந்து   நாள்களுக்கு   முன்பே   பிகேருக்கு   நன்கு   தெரியும்.

கடந்த   வாரம்   அக்கட்சியின்  அரசியல்  பிரிவுக்  கூட்டத்தின்போதே   அவ்விவகாரம்    தெரிந்து    விட்டது   என    பேராக்  பிகேஆர்  தலைவர்   முகம்மட்  நூர்  மனுட்டி    கூறினார்.

முகம்மட்  கோலாலும்பூர்,   பங்சாரில்      அம்னோ   முன்னாள்   பெரும்புள்ளிகள்  சிலருடன்  இருக்கக்  காணப்பட்டார்.

“அதனால்   அது  குறித்து   எங்களுக்கு  முன்கூட்டியே   தெரியும்”   என்று  முகம்மட்  நூர்  பேராக்,  செலாமாவில்   கூறினார்.

கெண்டனீஸ்  மொழியில்   பேசிய   அவர்  முகம்மட்   ஒரு  “பழைய   செய்தித்தாள்”  என்றும்   அவரைத்   தொலைத்துத்   தலைமுழுகியாயிற்று   என்றும்  குறிப்பிட்டார்.