டாக்டர் மகாதிர் முகம்மட்டின் வாரக்கடைசி கூச்சிங் பயணத்தால் சரவாக் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்கிறார் பார்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து (பிபிபி) உச்சமன்றத் தலைவர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார்.
“அதனால் எந்தத் தாக்கமுமில்லை”, என இயற்கைவள, சுற்றுசூழல் அமைச்சரான வான் ஜுனாய்டி இன்று கோலாலும்பூரில் கூறினார்.
“மகாதிர் பிரதமராக இருந்தபோது சரவாக்குக்கு எதுவுமே செய்யவில்லை. வெறும் பேச்சுத்தான்.
“அ்ன்வாரும் அப்படித்தான். சரவாக்கில் அரை பில்லியன் ரிங்கிட் செலவில் 31 பள்ளிகள் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்தார். ஒரு காசுகூட கொடுக்கவில்லை”.
அன்வார் தலைமையில் பிஎன் -ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்று நடந்ததை நினைவுகூர்ந்த வான் ஜுனாய்டி, அக்கூட்டத்தில் சரவாக்கில் சிறுசிறு திட்டங்களுக்காக எம்பிகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அன்வார் நிராகரித்தார் என்றார்.
“ ‘சரவாக்குக்கு அவ்வளவு பணம் கொடுக்க முடியாது’ என்று ஒரு கோப்பை எடுத்து என்மீது வீசி எறிந்தார்.
“20 ஆண்டுகளாக நான் இதை வெளியில் சொல்லவில்லை”, என வான் ஜுனாய்டி கூறினார்.
நேற்றிரவு கூச்சிங்கில் பக்கத்தான் கூட்டத்துக்கு 8,000 பேர் வந்திருந்தைச் சுட்டிக்காட்டியதற்கு அது ஒன்றும் பெரிய கூட்டம் அல்ல என்றார்,
“2013 பொதுத் தேர்தலில் இதைவிட பெரிய கூட்டம் எங்களுக்கு வந்தது.
“அவரது (மகாதிரின்) வாயிலிருந்து என்ன அபத்தம் வரப்போகிறது என்பதைக் கேட்பதற்காக பலர் வந்திருப்பார்கள்”, என்றாரவர்.
மகாதிமிருக்கும் அவரது கூட்டணிக்கும் சரவாக்கில் வரவேற்பில்லை என்கிறீர்கள், பின் எதற்காக எதிர்க்கட்சிகளின் சாதாரண தலைவர்களை கூட உங்கள் மாநிலத்தினுள் புக விடாமல் தடுக்கிறீர்கள்? அல்தான்துயா நஜிப் தான் போகுமிடமெல்லாம் அள்ளிவிட்டு திரிகிறார் என்றால், சிஷ்யப் பிள்ளைகள் நீங்களும் ஒரு படி மேல் தான் போங்க.
ஒன்றாக இருந்த காலத்தில் மக்களின் வரிப்பணத்தை பங்குபோட்டுக்கொண்ட நீங்களனைவரும், இன்று ஒருவர் மீது ஒருவர் மலத்தை வாரி வீசுகின்றீர்கள். சாக்கடையில் நெளியும் புழுக்கள்கூட உங்களைவிட மேல் !
முட்டாளுக்கு மூனு கால். பயத்துக்கு பயித்தங்கால்.