கெராக்கான் 14வது பொதுத் தேர்தலில் ஐந்து தொகுதிகளை பிஎன் பங்காளிக்கட்சிகளுடன் மாற்றிக்கொள்ளத் திட்டமிடுவதாக அதன் தலைவர் மா சியு கியோங் கூறினார்.
“அதற்கான பேச்சுகள் பிஎன் உயர்நிலையில் நடக்கின்றன. இறுதி முடிவைப் பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் ரசாக் அறிவிப்பார்”, என நெகிரி செம்பிலான் கெராக்கான் பேராளர் கூட்டத்தைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
கெராக்கான் ஆய்வு ஒன்றை மேற்கொண்டதாகக் கூறிய மா, அதில் 14வது பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் 42விழுக்காட்டினர் 40-வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்பதும் 53-விழுக்காட்டினர் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யாதிருப்பவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.