சிலாங்கூர் 100வது இலவச பேருந்தை ஓடவிட்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
அதிகமான இலவச பேருந்துகளை ஓடவிட்ட மாநிலம் என்ற முறையில் அதன் பெயர் மலேசிய சாதனைப் புத்தகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
இலவச பேருந்து சேவைக்கு சுபாங் ஜெயா குடியிறுப்பாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் இந்த 100வது பேருந்து சுபாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் பகுதிகளில் சேவை வழங்கிவரும் என சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி தெரிவித்ததாக சிலாங்கூர் மாநில அரசின் தொலைக்காட்சியான டிவி சிலாங்கூர் கூறிற்று.
“ஈராண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட இலவசப் பேருந்து சேவை சிலாங்கூர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் அது இப்போது மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றிருப்பதாகவும் டெங் சாங் கிம் (சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்) கூறினார்.
“மலேசியாவில் சிலாங்கூர் மட்டுமே இப்படிப்பட்ட சேவையை வழங்குவதாக டெங் கூறினார். ஆனால், நான் நினைக்கிறேன், உலகிலேயே மக்களுக்கு இலவசமாக பேருந்து சேவையை வழங்கிவரும் மாநிலம் சிலாங்கூராக மட்டும்தான் இருக்கும் என்று”, என மந்திரி புசார் குறிப்பிட்டார்.
வாழ்த்துக்கள். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிக தளங்களில் இலவச பேருந்து சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும். உங்கள் ஆட்சியை தேர்தெடுத்த சிலாங்கூர் மக்களுக்கு நீங்கள் அதிகம் சேவை வழங்கிடவேண்டும்.மற்ற மாநிலங்களுக்கு உங்கள் ஆட்சி முன்னுதாரணம் ஆகட்டும்.
இந்த இலவச பேருந்து சேவையில் அதிக இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவது மக்களுக்கு குறிப்பாக உங்கள் ஆட்சியை தேர்தெடுக்க இந்தியர்கள் வாக்களித்ததற்கு நன்றி உரியதாக அமையும்.
இந்த இலவச பேருந்து சேவைகள் சிலாங்கூர் அரசு வழங்குவது மிகவும் வவேற்க்கதக்கது. இருப்பினும் இந்த இலவச பேருந்து சேவைகள் முழுமையாக ஒரு தனியார் நிறுவனம் கீழ் நடத்தப் படுகிறதா என்ற கேள்வியும் உண்டு. அதன் ஓட்டுனர்கள் அரசாங்கத்தின் கீழ் வேலை செய்கிறார்களா அல்லது ஒரு தனியார் நிறுவனத்திடம் கொடுத்து இலவச சேவைகள் வழங்கி வருகிறதா. அப்படி அந்த தனியார் நிறுவனத்திடம் கொடுத்து அந்த நிறுவனம் எடுத்து நடத்தும் போது அதன் நாள் வாடகை எவ்வளவு கொடுக்கபடுகிறது அல்லது மாதம் எவ்வளவு ஒரு பேருந்திற்கு செலவாகிறது. இந்த இலவச பயண சேவை வழி எந்த மக்கள் பயன் அடைகிறார்கள் உள்ளூர் வாசிகளா அல்லது வெளிநாடுகளில் இருந்து இங்கு தங்கி வேலை செய்பவர்களா. கோலாலம்பூரில் பார்க்கும்போது இந்த இலவச சேவை பேருந்து சேவை வழி அதிகமானோர் பங்களாதேஷ் வாசிகளே பயணம் செய்கின்றனர். இம்மாதிரி இலவச சேவைகள் வழங்குவதை விட வயது முதிர்ந்த 60 வயதை கடந்த வயோதிர்களுக்கு மாதந்தோறும் அவர்களுக்கு ஒரு தொகை கொடுத்தால் நல்ல பயன் அடைவார்கள். நாம் வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இன்னும் சற்று பின் நோக்கியே இருக்கிறோம். இப்போது தான் நாம் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு ஈடாக முன்னேறி வருகிறோம். நன்றி
ஆமா நல்ல சதனைத்தான், 100 செருப்புகளை கோத்து மாலையா போட வேண்டும். கையில பணமிருந்தா கலுதை கூட அரசனாம், அது மாதிரி மாநில அரசாங்கத்தோட மானியத்தை வீண்னட்டிக்கிறான் முட்டாள்.
இந்த மாநிலத்திலுள்ள ஏழைகளுக்கு செய்ய \ உதவ எவ்வளவோ இருக்கு, கழுதை வெளிநாட்டுக்காரன்களுக்கு இலவசமா பஸை விட்டு உள்ளூர் டெக்ஸி ஓட்டுனர் வைத்துல அடிக்குது ஊதாரி நாய்.
புலி அவர்களே ! அருமை!!அருமை!!! எதுசெய்தால் உள்ளூர் மக்களுக்கு நன்மை தரும் என்ற இங்கிதம் தெரியாத நாதாரிகள் இவர்கள்.
வணக்கம்
சிலாங்கூர் அரசங்காத்திற்கு வாழ்த்துக்கள்.அதில் அதிகமாக
பயணிப்போர் யார் என்று கவனித்தீர்களா?மலேசியர்கள் நன்மை அடைகிறார்களா?.நன்றி.
இலவச பேருந்து சேவை யாருக்கு ! இந்தோனேசியக்காரனுக்கும் ! பங்காளவுக்கும் ! வெளியூரில் இருந்து வந்த கள்ள குடியேறிகளுக்கும் ! நமது மக்களுக்கு இதில் என்ன நன்மை ! 100 பேருந்துகள் வாங்க செலவழித்த தொகை எவ்வளவு ! இடை தரகர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகை ?? தினசரி செலவீனம் ?? டிரைவர் சம்பளம் ?? பராமரிப்பு செலவீனம் ?? முட்டாள் அரசாங்கம் !! எதுவெல்லாம் ஒரு சாதனை என்று மார் தட்டி கொள்ளும் மடையர்கள் !!சிலாங்கூர் மாநில பள்ளி களுக்கு இலவச பேருந்துகள் வாங்கி விட்டிருந்தாள் பள்ளி பிள்ளைகளுக்கு பயனாக அமைந்திருக்கும் ! நமது பெட்றோர் களுக்கும் சுமை குறைந்திருக்கும் ! பள்ளிகளை தத்து எடுத்து பிள்ளைகளுக்கு உபகரணங்கள் வாங்கி தந்தாலும் பயனாக அமைத்திருக்கும் ! அம்னோ கரண் லஞ்சமாக சம்பாதித்தான் ! இவன் மறைமுகமாக சம்பாதிக்கிறான் !! மக்கள் முட்டாளாக இருக்கும் வரை இவனெல்லாம் புத்திசாலிதான் !!