பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சரவாக்கியர்களுக்கு இழைத்த ஒரே தீங்கு டாக்டர் மகாதிர் முகம்மட்டை 22 ஆண்டுக்காலத்துக்குப் பிரதமராக ஆதரித்து வந்ததுதான் என அம்னோ- ஆதரவு இணையத்தளமொன்று கூறியது.
அதேபோல் அவரின் தந்தை இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் கிழக்கு மலேசியர்களுக்கு இழைத்த தீங்கு , அவருக்குப் பின் பிரதமரான உசேன் ஒன்னிடம் மகாதிரைத் துணைப் பிரதமராக்கச் சொன்னது .
நஜிப் மட்டும் அம்னோவில் ஒரு நெருக்கடி மூண்டபோது மகாதிருக்குப் பதிலாக தெங்கு ரசாலி ஹம்சாவுக்கு ஆதரவு கொடுத்திருந்தால் சரவாக் நன்றாக இருந்திருக்கும் என அந்த இணையத்தளம், MyKMU.net கூறியது.
1987-இல் தெங்கு ரசாலி ஹம்சா, டாக்டர் மகாதிரை எதிர்த்தபோது நஜிப் பின்னவரை ஆதரித்தார்.
“ஆம், அப்துல் ரசாக்கும் நஜிப்பும் சரவாக்குக்கு இழைத்த தீங்கு மகாதிரை ஆதரித்ததுதான். அதன் காரணமாக 22 ஆண்டுகளாக சரவாக் புறக்கணிக்கப்பட்டிருந்தது.
“இபோது நஜிப் சரி செய்து வருகிறார்”, என்றது கூறியது.