அரசியல் நிதியை முறைப்படுத்தும் சட்டம் சிக்கலானதுதான் என்றாலும் அதை வரைவதில் புத்ரா ஜெயா இதுவரை சிரமங்களை எதிர்நோக்கவில்லை எனப் பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் கூறினார்.
“அது சிக்கலான சட்டம்தான். நிறைய அலோசனைகளை நடத்த வேண்டியுள்ளது.
“ஆனாலும், பிரச்னை இல்லை. அதை உருவாக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம்”, என்றார்.
உத்தேச அரசியல் நன்கொடை மற்றும் செலவினச் சட்டம்(பிடிஇஏ) அடுத்த ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படலாம் என லவ் குறிப்பிட்டார்.