நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் (என்எஸ்டிபி) வெளியிடும் நாளேடுகள் இனி, சாபா, சரவாக்கில் கிடைக்க மாட்டா.
கிழக்கு மலேசிய வாசகர்கள் இனி அந்நாளேடுகளை இணைய வடிவில் மட்டுமே வாசிக்க முடியும்.
ஆன்லைன் நாளேடுகளில் வாசகர்களுக்குச் செய்திகள் விரைவில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என பெரித்தா ஹரியான் கூறியது.
பத்திரிகை விற்பனையைக் கணக்கிடும் ஏபிசி அமைப்பு, எல்லா மொழி பத்திரிகைகளின் விற்பனையுமே குறைந்திருப்பாதாகக் கூறுகிறது. சில 62.2 விழுக்காடு அளவுக்குக்கூட குறைந்துள்ளன.
2012-இலிருந்து 2016வரை ஹரியான் மெட்ரோ விற்பனை 379,169 -இலிருந்து 142,262 ஆக, அதாவது 62.5 விழுக்காடு குறைந்துள்ளது.
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் விற்பனை 93,321-இலிருந்து 54,490 ஆக 41.6 விழுக்காடு குறைந்தது.
பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா ஆகியவற்றின் விற்பனை 30 விழுக்காடு குறைந்தது.
நஜிப்பை நக்கிய வாழ்த்திய பத்திரிக்கைகளுக்கு அழிந்த போனதுக்கு ரொம்ப சந்தோசம் இவணுங்க் பத்திரிக்கை வெளியீட்ட்ல் மக்களுக்கு என்ன நன்மை மக்கள் உணர்ந்துவிட்ட்னர் மக்களுக்கு சபாஷ் பத்திரிக்கைகள் …. செய்தி BN நை நக்கி போடடால் அழிவுதான் தம்பி
இந்த பத்திரிக்கைகளை வாசித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. துதி பாடி காலத்தை ஓட்டும் ஈனங்கள்– 3 ம் உலக பத்திரிக்கைகள் என்பதை பறை சாட்டும் இவைகள் இயற்க்கை எய்துவது நலமே.
தமிழ் பத்திரிக்கைகளின் நிலை என்ன?
இன்று தகவல் தொழில் நுட்பக் காலம். பத்திரிக்கைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு இந்த உண்மைத் தெரியாதா? வாசகர்களின் ஆதரவுக் குறைந்ததைக் காரணம் காட்டி பத்திரிக்கை வெளியீட்டை நிறுத்தியதற்கு பத்திரிக்கைத் தரப்பில் சொல்லப் பட்டக் காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? நம் தமிழ்ப் பத்திரிக்கைகள் இதையொரு நல்லப் பாடமாக ஏற்று தவிர்க்க முடியாத மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப அவர்கள் இனிமேல் நடந்துக் கொள்ள வேண்டுமென தாழ்மையோடுக் கேட்டுக் கொள்கின்றேன். என்றும் சுதந்திரமான நல்லத் தமிழ்ப் பத்திரிக்கைகள் நமக்கு வேண்டும்.
பழனிசாமி சார்! ரொம்பவும் நம்பி விடாதீர்கள். தமிழ்ப்பத்திரிக்கைகள் அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன. அவர்கள் வீழ்ந்தால் பத்திரிக்கைகளை மூடிவிட்டு போயிவிடுவார்கள். அவ்வளவு தான் அவர்களின் இனப்பற்று!
abraham terah சரியாக சொல்லிவிட்டார். ஏதாவது பத்திரிக்கையில் இவர் வேலை செய்கிறாரோ?
நம் தமிழ்ப்பத்திரிக்கைகள் பற்றி நிறைய சொல்வதற்கு உண்டு, தமிழை வளர்க்கிறேன் என பத்திரிகை துவங்கி அரசியல் நடத்துவதும், விளம்பரங்கள் வழி தங்கள் கல்லாவை நிரப்புபவர்கள் இவர்கள். இவர்கள் அலுவலகங்களில் தொலைபேசிக்கு பதிலளிக்கும் பெண்களுக்குக் கூட தமிழ் சரியாக பேச வருவதில்லை, நாம் தமிழில் பேசினால் பதில் ஆங்கிலத்தில் வருகிறது. அஞ்சல் தமிழில் அனுப்பினால் பதில் ஆங்கிலத்தில் வருகிறது, என்னே தமிழ்ப்பற்று பாருங்கள், சில மாதங்களுக்கு முன்பு ஒரு சகோதரி தமிழ்ப்பத்திரிக்கையில் வெளிவரும் படைப்புகளுக்கு சன்மானம் வழங்கலாமே என ஒரு கருத்தை முன்வைக்க, உங்கள் படைப்புகளையெல்லாம் பிழை திருத்தி வெளியிடுவதே பெரிய விடயம் என அகம்பாவத்துடன் பதில் சொன்னாரே ஒரு பத்திரிக்கை ஆசிரியர். இந்த உலகில் எல்லாத் தொழில்களுக்கும், கலைகளுக்கும், படைப்புகளுக்கும் விலையுண்டு, ஆனால் ஓர் எழுத்தானின் எழுத்து மட்டும் இவர்கள் சம்பாதிக்க இனாமாக வேண்டுமாம், நம் நாட்டு எழுத்தாளர்கள் புத்திசாலிகள், அதனால்தான் அவர்கள் தமிழ் நாட்டு இணைய இதழ்களுக்கும், தங்களின் புத்தக வெளியீடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்தப் பத்திரிக்கைகளுக்கு கொடுப்பதில்லை. நமது தமிழ்ப்பத்திரிக்கைகள் அள்ளிக்கொடுக்காவிட்டாலும் கிள்ளிக்கொடுத்தாவது எழுத்தாளர்களை ஊக்குவித்து வாசகர்களையும், எழுத்தாளர்களையும் அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையென்றால் அவர்கள் விதியை அவர்களே நிர்ண்யித்துக்கொள்ளட்டும். ( இணைய உலகில் சக்கைப்போடு போடும் தமிழ் நாட்டில் தங்களால் இயன்றதைக் கொடுத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நற்பழக்கம் உண்டு அதனாலேயே அவர்கள் எக்காலத்திலும் வாசகர்கக்காகவும், எழுத்தாளர்களுக்காகவும் நல்ல படைப்புகளுக்காகவும் ஏங்கி எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டதில்லை, நம் நாட்டு பத்திரிக்கை ஞானிகளுக்கும் இந்த உண்மைகள் உறைக்கட்டும், எழுத்தாளனின் எழுத்தை அபகரித்து வயிறு வளர்க்கும் அவல நிலையிலிருந்து அவர்கள் மீளட்டும். நன்றி
abraham terah அவர்கள் சொல்வதுப் போல் பத்திரிக்கைகள் அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன என்பது உண்மைதான். அதுவும் இவர்கள் நம் பெயர்கள் சொல்லி தங்களின் ஒட்டுமொத்த சுயநலத்திற்காக மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்களென்பது பெரியவுண்மை. இங்கேயும் கொஞ்சம் நல்லவர்களுண்டு. இதுதான் இன்றைய நடைமுறை. இதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நாளிதழ்கள் பொறுப்போடு தரமாக செயல் பட்டால் நாளையே நம் மக்களிடம் நல்ல மாற்றங்கள் மறுமலர்ச்சிகள் உருவாகும்!
சிங்கம் சார்! நான் பத்திரிகையாளன் அல்ல. இளம் வயதில் ஆங்கிலப் பத்திரிகையாளன் ஆக வேண்டும் என்னும் கனவு இருந்தது. தகுதி இன்மையால் அது நிறைவேற வில்லை. இப்போது இணையத்தளத்தில் தமிழில் கிறுக்கி வருகிறேன்! நீங்கள் படிக்க: கோடிசுவரன்