ஜோ லோ என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் லோ டெக் ஜோ இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க அனைத்துலக போலீஸ் அமைப்பின்(இண்டர்போல்) உதவியை அரசாங்கம் நாடியிருக்கிறது.
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று நாடாளுமன்றத்தில் இதை உறுதிப்படுத்தினார்.
போலீஸ் லோ இருக்கும் இடத்தை அறிய இண்டர்போல் உதவியை நாடுமா என்றும் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவாரா என்றும் அஸ்மின் அலி(பிகேஆர்- கோம்பாக்) கேட்ட கேள்விக்கு ஜாஹிட் இவ்வாறு பதிலளித்தார்.
“கோம்பாக் உறுப்பினர் குறிப்பிட்ட மனிதரைக் கண்டுபிடிக்க உதவுமாறு இண்டர்போலைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்”, என்றாரவர்.
ஆனால், அவ்விவகாரம் தொடர்பில் இண்டர்போலிடமிருந்து இதுவரை பதிலில்லை என்றவர் சொன்னார்.
நீயே அவனை ஒளிச்சு வைச்சுட்டு இப்ப தேடுறியாடா? நல்ல நாடகம் டா. வெங்காயம்.