ஹரப்பான் நிழல் பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு ஒன்றுமில்லை, சுப்ரமணியம் அறிவிக்கிறார்

 

இந்தியர்கள் கொண்டாடி மகிழ்வதற்கு ஹரப்பான் நிழல் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் நஜிப் ரசாக்கின் 2018 பட்ஜெட்டில் நிறைய இருக்கின்றன என்று மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார்.

ஹரப்பான் பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு பயனளிக்கும் எதையும் தாம் காணவில்லை என்றாரவர்.

“இந்தியர்கள் மீது கவனம் செலுத்தும் எதையும் நான் காணவில்லை. ஆகவே. நான் (ஹரப்பான் நிழல் பட்ஜெட் குறித்து) கருத்து ஏதும் கூற முடியாது”, என்றார்.