திங்கட்கிழமை தொடக்கம் காற்று வேகமாக வீசும்; கடல் கொந்தளிப்பாக இருக்கும்

நாட்டின் பல பகுதிகளில் திங்கட்கிழமை தொடக்கம் காற்று வேகமாக வீசுவதுடன் கடலும் கொந்தளிப்பாக இருக்கும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரையில் இருக்கும் என்றும் 3.5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் உயரும் என்றும் அது கூறியது. அந்த நிலை நவம்பர் 29ம் தேதி வரை நீடிக்கும்.

“கிளந்தான், திரங்கானு, லாபுவான் கூட்டரசுப் பிரதேசம், சபா ( உட்பகுதி, மேற்குக் கடலோரம், குடாட்), தியோமான் ஆகியவற்றின் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும்.”

“சாமுய் (கிளந்தான், திரங்கானு) கொண்டோர், வடக்கு பவளப் பாறைகள் (தென் சீனக் கடல்) புலாவ் லாயாங் லாயாங், புங்குரான் (தீவகற்பத்துக்கும் கூச்சிங்கிற்கும் இடையில் உள்ள பகுதி) தெற்கு பவளப் பாறை( சரவாக் கடல் பகுதி முழுவதும்), பலாவான் (வடக்கு சபா) ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகள்,”என அந்த அறிக்கை தெரிவித்தது.

காற்று வேகமாக வீசுவதும் கொந்தளிப்பான கடலும் அனைத்து கடலோர நடவடிக்கைகளுக்கும் சிறிய படகுகளுக்கும் ஆபத்தானவை.

பெர்னாமா