சித்தி ஹஸ்மா: விருதுகளைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி கணவர் கட்டாயப்படுத்தவில்லை

டாக்டர்  மகாதிர்  முகம்மட்டைப்  பின்பற்றி    அவரின்    துணைவியார்   டாக்டர்   சித்தி   ஹஸ்மா   அலியும்   அவருக்குக்  கொடுக்கப்பட்ட    சிலாங்கூர்   அரச   விருதுகளைத்   திருப்பிக்   கொடுத்திருக்கிறார்.

இன்று  காலை   அது   குறித்து   முகநூலில்   பதிவிட்டிருந்த    சித்தி   ஹஸ்மா,91,   அவற்றைத்    திருப்பிக்  கொடுக்குமாறு   மகாதிர்    கட்டாயப்படுத்தியதில்லை    என்றார்.

“அவர்  கட்டாயப்படுத்தவில்லை.  நான்தான்  சொந்த   விருப்பத்தின்பேரில்   காலஞ்சென்ற  சுல்தான்   கொடுத்த    விருதுகளைத்   திருப்பிக்  கொடுத்தேன்.

“என்  கணவர்   அப்படி(விருதுகளைத்   திருப்பிக்கொடுக்க)   நினைத்தபோது   நானும்  அதைப்  பின்பற்றுவதே  சரி   என்று   நினைத்தேன்”,  என்றாரவர்.