2003வரை இருபதாண்டுகள் பிரதமராக இருந்த டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு மீண்டும் பிரதமராகும் ஆசையெல்லாம் கிடையாது.
“அப்பதவிக்குப் பொருத்தமாக வேறு ஒருவர் கிடைக்கவில்லை என்ற நிலை உருவானால் ஒரு வேளை இந்த 92வயது மனிதன் பிரதமர் வேட்பாளராகலாம்”, என்றாரவர்.
பக்கத்தான் ஹராபான் தலைவரான மகாதிர், இரண்டு வாரங்களுக்கு முன்பு எதிரணியினர் தேர்தலுக்கு முந்திய ஆலோசனைக் கலப்புக் கூட்டம் நடத்தியபோது பிரதமர் விவகாரம் குறித்து எந்த முடிவும் செய்யவில்லை என்றார்.
“என்னை அவர்கள் நியமிக்கவில்லை. அதன் தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை”, என இன்று பிற்பகல் பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் கூறினார்.
டிசம்பர் 1-2இல் நடந்த அக்கூட்டத்துக்குப் பின் வெளிவந்த செய்திகள் மகாதிரைப் பிரதமராகவும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலைத் துணைப் பிரதமராகவும் நியமிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தன.
mahathir oru thamileena thurogi…………..
awan vanthu inimey yethayum kilikka povathu kidayaathu.
y\pakatan vendraal yen anwar pirathmaraaga mudiyaayhaa