சீபீல்ட் தோட்ட மஹா மாரியம்மன் ஆலய நடவடிக்கை குழு என்ற ஓர் அரசுசாரா இயக்கம், சுபாங் ஜெயா யூஎஸ்ஏ 25ல் உள்ள ஆலயத்தின் இடம் மாற்றம் குறித்து அதன் கவலையைத் தெரிவித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர். சிவராசா மற்றும் சார்ல்ஸ் சந்தியாகு வெளியிட்ட அறிக்கையில் கூறுகின்றனர்.
அந்த விவகாரம் குறித்து கடந்த 14.12. 2017 இல் சிலாங்கூர் மாநில மந்திரி புசாரைப் பிரதிநிதித்து சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ ஆகிய இருவரும் முன்னாள் சீபீல்ட் தோட்ட மஹா மாரியம்மன் ஆலய நடவடிக்கை குழுவைப் பிரதிநிதித்த ஸ்ரீ ராமாஜி குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இக்கோயில் விவகாரத்துக்குத் தீர்வு காண முற்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்:
- மேம்பாட்டு நிறுவனத்தின் நடவடிக்கையை எதிர்த்து ஆலய காபந்து குழு தலைவர்நாகராஜாவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கை இவ்வாண்டு ஜூன் மாதம் தோல்வியடைந்தது.
- ஓன் சிட்டி மேம்பாட்டு நிறுவனம், சீபீல்ட் தோட்ட மஹா மாரியம்மன் ஆலயத்தைத் தற்போதுள்ள இடத்திலிருந்து இடமாற்றம் செய்ய அந்நிறுவனம் பெற்றுள்ள நீதிமன்ற உத்தரவை அது அமல்படுத்த தீவிரம் காட்டுவதால் தோன்றிய பிரச்சனையைத் தீர்க்க மாநில மந்திரி புசாரின் உதவி நாடப்பட்டதாகவும், அவரின் தலையீட்டால் ஆலய இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
- இந்த ஆலயத்தின் எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரத்திற்கு 2 பிரிவுகள் 2001ம் ஆண்டுமுதல் சர்ச்சையில்ஈடுபட்டுள்ளன. அதில் கே. செல்லப்பாவின் தலைமையில் செயல்படும் பிரிவு 1996 இல் யுஇபி சைம்டார்பி நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்து ஆலய நிலத்தை அப்போது தற்காத்தது. அதன்பிறகு, செல்லப்பா குழு ஆலயத்தை நிர்வாகம் செய்யும் எம். நாகராஜாவின் தலைமையில் செயல்படும் ஆலயக் காபந்து குழுவின் மீது 2001 இல் வழக்கு தொடுத்து ஜூலை 2014ல் அதிலும் வெற்றி பெற்றுள்ளது.
நாகராஜாவின் தலைமையில் செயல்படும் ஆலயக் காபந்து குழு அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை.
- அப்படிப்பட்ட சூழ்நிலையில் 2014 இல் ஒரு கூட்டு இணக்கத்தின்பேரில் மாநில அரசின் பிரதிநிதிகள், மேம்பாட்டு நிறுவனம், ஆலயத்தைப் பிரதிநிதிக்கும் இரண்டு குழுக்கள் ஒன்றுகூடிச் சில பரிந்துரைகளுக்குத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.
அப்பரிந்துரை:
.
ஆலயத்தின் அருகில் சுமார் பத்து ஆயிரம் அடி நிலத்திற்குக் கோவிலை இடம்மாற்றுவதைவிட, புத்ரா ஹைட்டிற்கு 1 ஏக்கர் நிலத்தில் ஆலயத்தை இடம் மாற்றுவது.
5, அந்தக் கூட்டத்தில் செல்லப்பா அணிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அதிகாரத்திற்கு ஏற்ப ஓர் ஏக்கர் நிலத்திற்கு மாறிச்செல்லவும் ஆலயத்திற்கு ரிங்கிட் ஒரு மில்லியனும் வழங்கினால் தற்போதுள்ள இடத்தை மேம்பாட்டாளருக்கு விட்டுவிடவும் சம்மதித்தனர்.
- அதன்பின் மேம்பாட்டாளர் செலவில்மாற்று இடத்தில் ஆலயச் சிற்பங்களை இடம்மாற்றிப் பூஜைகள் செய்யத் தேவையான பாலபிசேக மண்டபமும் நிறுவப்பட்டுவிட்டது.
7, முன்பு சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தின் அருகில் அமைந்திருந்த காளியம்மன் ஆலயத்திற்கும், புதிய இடமான புத்ரா ஹைட்டில் 1 ஏக்கர் நிலம் வழங்கப் பட்டுள்ளதாகவும், மேலும் இவ்விரண்டு ஆலயங்களும் கூட்டாகப் பயன்படுத்த, 3/4 ஏக்கர் நிலம் கார் நிறுத்துவதற்கான இடமாக வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், ராமாஜி தலைமையிலான சீபீல்ட் தோட்ட மஹா மாரியம்மன் ஆலய நடவடிக்கை குழு அந்த இரண்டு (செல்லப்பா மற்றும் நாகராஜன் குழுக்கள்) நிர்வாகங்களையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், சரித்திர அடிப்படையில் ஆலயம் இப்போது இருக்கும் இடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கூறியது.
செல்லப்பா மற்றும் நாகராஜூ ஆகிய இருவரும் நீதிமன்றத்தை அணுகிச் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாலும், அவர்களின் கைவசம் நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாலும், மாநில அரசு எந்த நடவடிக்கையையும் மிகக் கவனத்துடன் நீண்டகால அடிப்படையில் ஆலயத்தின் நலனைக் கருதி அனைத்துத் தரப்பினரும் செயல் படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது என்று அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பினரும் இந்த விவகாரத்தை நன்கு ஆலோசித்து அனைவருக்கும் பயனுள்ள ஒரு முடிவினைச் செய்தால் அதற்கு மாநில அரசின் ஆதரவு கிடைக்கும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ள எல்லாக் கருத்துகளும் மாநில மந்திரி புசாருக்குத் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
நல்ல முடிவுக்கு நாங்கள் எப்பொழுதும் ஆதரவு அளிப்போம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசாரைப் பிரதிநிதித்த சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ ஆகிய இருவரும் கூறினர்
முதல் கேள்வி எந்த பாகுபாடுமின்றி ஒரு நீதிபதி வழக்கை விசாரித்து செல்லப்பாத்தான் உண்மையான தலைவர் என்று தீர்ப்பு அளித்தப்பின், ஒரு வழக்கறிஞரான சிவராசா, பெரியவர் ராமாஜியை கூட்டிவைத்துக்கொண்டு என்ன நாட்டாமை செய்கிறார்.?
2. இந்த ராமாஜி அல்லது அவரின் கூட்டம் நாட்டில் எத்தனை கோவில்களை காப்பாற்றியுள்ளது? ஆனால் செல்லப்பா 1996 லேயே தோட்ட நிர்வாகத்தை எதிர்த்து போராடி கோவிலை காப்பாற்றியுள்ளார் ! ஆக, செல்லப்பா ஹிரோவா ? கூட்டத்தோடு கோவிந்தா போடும் ராமாஜி ஹீரோவா? இந்து ஆலயத்துக்கு நல்லது செய்து அதற்கு ஓரு ஏக்கர் நிலமும் , ஒரு மில்லியன் வெள்ளியும் வாங்கித்தந்துள்ள செல்லப்பா இந்த சமுதாயத்தால் போற்றபட வேண்டிய தலைவர்?
அவர் சூ__லே ராமாஜி ஏன் விரலை, விடுகிறார்? திறமையுள்ள நல்லவர்களை ஏன் நம்மவனுங்க செயல்பட விடமாட்றானுங்க. ராமாஜியும்- சிவராசாவும் பத்துமலை கோவில் தலைவர் நடராஜாவோட சூ___லே கைய விட்ட இன்னும் பெரிசா கிடைக்குமே, அதை செய்யுவாங்கலா?