ஜொகூர் பெட்ரோல் நிலையத்தில் கொலை, அறுவர் தடுத்து வைக்கப்பட்டனர்

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேபி பெட்ரோல் நிலையத்தில் நடந்த கொலை மீதான விசாரணையில் உதவுவதற்காக அறுவரைத் தடுப்புக் காவலில் வைக்க ஜோகூர் பாரு மஜிஸ்டிரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

20 வயதிலிருக்கும் 5 ஆண்களையும் 19 வயதான ஒரு பெண்ணையும் ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க போலீஸ் தாக்கல் செய்திருந்த மனுவை மஜிஸ்டிரேட் நூர் அஸ்யா அஹமட் அனுமதித்தார்.

ஒரு ஆடவரும் ஒரு பெண்ணும் விசாரணைக்காக நேற்று கைது செய்யப்பட்டதாக ஜொகூர் போலீஸ் தலைவர் முகமட் காலிட் முகமட் அறிவித்திருந்தார்.

மற்ற நான்கு ஆண்களும் இன்று காலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 7.30 க்கு வெள்ளை பிஎம்டபுள்யு காரில் வந்த நால்வர் 44 வயதான நபரை இடித்துத் தள்ளி பின்னர் குத்திக் கொன்றனர்.