நாளை புத்ரா ஜெயாவிலுள்ள புத்ரா மசூதியில் நடைபெறவிருக்கும் “ஜெருசலத்தைக் காப்பாற்றுவோம்” ஒற்றுமைப் பேரணியில் பிகேஆர் மற்றும் அமனா ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று வலியுறுத்திக் கூறினார்.
ஆனால், அவரது அறிக்கை அமனாவின் உதவித் தலைவர் முஜாஹிட் யுசோப் ராவாவின் அறிக்கைக்கு முரணாக இருக்கிறது. நாளை நடைபெறவிருக்கும் பேரணியில் அமனா பங்கேற்காது என்று முஜாகிட் கூறியுள்ளார்.
அமனாவைப் பிரதிநிதிப்பவர்கள் அங்கிருப்பார்கள் (மற்றும்) பிகேஆரை பிரதிநிதிப்பவர்கள் அங்கிருப்பார்கள்”, என்று ஸாகிட் பெட்டாலிங் ஜெயாவில் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நாளைய பேரணியில் கலந்துகொள்ளுமாறு முஜாஹிட் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். ஆனால், அப்பேரணியில் ஒரு பேச்சாளராக இருக்குமாறு ஸாகிட் கேட்டுக் கொண்டதை நிராகரிக்கும் எண்ணம் அவர் கொண்டிருப்பதாகவும், அது கட்சியின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டோடு ஒத்திருப்பதாகும் என்று ப்ரீ மலேசியா டுடே நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
முஜாஹிட்டுக்கு பதிலாக அவர்கள் வேறொருவரை கண்டுள்ளனர், அவரும் அமனாவைச் சேர்ந்தவர்தான் என்று ஸாகிட் கூறுகிறார்.
பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசூதியன் இஸ்மாயில் அப்பேரணியில் பங்கேற்பதை பிகேஆரின் தொடர்புகள் இயக்குனர் ஃபாமி ஃபாட்ஸில் இன்று ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
பக்கத்தான் ஹரப்பன் இப்பேரணியில் பங்கேற்குமா என்ற கேள்விக்கு, “ஹரப்பான் பதிவு செய்யப்பட்டு விட்டதா?”, என்று ஸாகிட் குதர்க்கமாகப் பதில் அளித்தார்.
நாளைய பேரணியில் ஜெருசலம் பற்றிய பிரச்சனை குறித்து மலேசியா ஒரு தீர்மானத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
hello police permit are you apply ready ka ?? don’t make it double standard