நஜிப்: ‘நல்ல நண்பர்’ டிரம்ப்புக்காக இஸ்லாத்தின் புனிதத்தன்மையைத் தியாகம் செய்ய மாட்டேன்

 

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்புடனான தமது இணைப்புகளைப் பேணுவதற்காக இஸ்லாத்தின் புனித்தன்மையைத் தியாகம் செய்ய மாட்டேன் என்று பிரதமர் நஜிப் ரசாக் சூளுரைத்தார்.

“ஆம், நான் வெள்ளைமாளிகைக்கு வரவேற்கப்பட்டேன். ஆம், டொனல்ட் டிரம்ப் எனது நல்ல நண்பர்தான்.

“ஆனால் கோட்பாட்டின்படி, நான் இஸ்லாத்தின் புனிதத்தன்மையைத் தியாகம் செய்ய மாட்டேன்”, என்று புத்ரா மசூதியில் இன்று பிற்பகலில் “ஜெருசலத்தைப் பாதுகாப்போம்” பேரணில் கலந்துகொண்டிருந்த 1,000க்கும் மேற்பட்டவர்களிடம் நஜிப் கூறினார்.

டொனல்ட் டிரம்ப் ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்க எடுத்த முடிவைத் தொடர்ந்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக புத்ரா ஜெயா இப்பேரணிக்கு ஏற்பாடு செய்தது.

ஒரு முஸ்லிம் என்ற முறையில், தமக்கு இஸ்லாத்தின் புனிதத்தன்மையை தாக்குகிறவர்களிடமிருந்து அதனைத் தற்காக்கும் தனிப்பட்ட கடப்பாடு உண்டு என்று நஜிப் கூறினார்.