அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்பிற்கு எதிராக, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இன்று புத்ரா ஜெயாவில் நடத்தப்பட்ட பேரணியில் முன்னாள் பிரதமர் மாகதிர் முகமட் கலந்து கொண்டார்.
மகாதிர் பிற்பகல் மணி 1.00 அளவில் அங்கு வந்து சேர்ந்தார். அவரது கார் வந்து நின்றதும் பலர் அவரை வரவேற்றனர்.
அதற்கு முன்னதாக அவரது வலைதளத்தில் பதிவு செய்திருந்த ஒரு செய்தியில் இந்த விவகாரத்தில் பேரணிகள் நடத்துவதற்கு மாறாக அரசாங்கம் மிக அர்த்தமுடைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று மகாதிர் வற்புறுத்தினார்.
மகாதிர் புத்ரா ஜெயாவிற்கு வந்த சில நிமிடங்களுக்குப் பின்னர் நஜிப் வந்தார்.
இந்தப் பேரணியில் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் பமிடி, அம்னோ தலைவர்கள் ஜொஹாரி அப்துல் கனி, அப்துல் அஜிஸ் ரஹீம் மற்றும் புவாட் ஸார்காசி ஆகியோர் இருந்தனர்.
பாஸ் தலைவர் ஹாடியை அவரது மகன் காலிட் பிரதிநிதித்தார். பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசூதியன் மற்றும் அமனா துனைத் தலைவர் ஹஸ்னுடின் முகமட் யுனுஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.