பெல்டா நாடகம் போதும், நடவடிக்கை தேவை: எம்பி வலியுறுத்து

பெல்டா   ஊழல்களை  வைத்து   நாடகமாடுவதை   நிறுத்திக்கொண்டு  உடனடியாக    நடவடிக்கை   எடுக்குமாறு   பிகேஆர்   எம்பி  ஒருவர்   வலுறுத்தினார்.

“பெல்டா   ஊழல்களை   அடுத்தடுத்து   வெளிப்படுத்தி   நாடகமாடுவதை  நிறுத்திக்கொண்டு  அதற்குப்  பொறுப்பானவர்கள்மீது  உறுதியான   சட்ட   நடவடிக்கை   எடுக்கப்பட  வேண்டும்”,  என   லெம்பா  பந்தாய்   எம்பி   நுருல்   இஸ்சா   அன்வார்  கூறினார்.

“அம்னோவின்  கைகளில்     பூமிபுத்ரா   அமைப்பு  ஒன்று  கெட்டழிவைத்   தடுக்க   அவ்வாறு   செய்வது   அவசியம்” , என்றாரவர்.

பெல்டாவின்  இன்றைய   வருந்ததத்தக்க   நிலைக்கு,    அதை   ரிம12.26 பில்லியன்  கடனாளியாக்கியதற்குப்   பொறுப்பானவர்கள்   யார்  என்பதைக்  கண்டறிந்து   அவர்களைச்   சட்டத்தின்முன்   நிறுத்த     வேண்டும்   என்றார்.

“பூமிபுத்ரா    சமூகத்தை  மேல்நிலைக்குக்   கொண்டுவரும்  பொறுப்பைக்  கொண்டுள்ள  பெல்டாவை  முழுமையாக   துப்புரவுபடுத்த   வேண்டும்”,  என்றவர்   கேட்டுக்கொண்டார்.

நுருல்   கோலாலும்பூர்  ஜாலான்  செமராக்கில்  பெல்டாவுக்குச்   சொந்தமான  ரிம270மில்லியன்  பெறுமதியுள்ள  நிலத்தின்   உரிமை   மாற்றிவிடப்பட்டுள்ளது    தெரிவந்துள்ளதாக    பெல்டா  தலைவர்   ஷாரிர்  அப்துல்  சமட்   அறிவித்துள்ளது   குறித்து  கருத்துரைத்தார்.