இன்றிரவு 11.59-க்குப் பிறகு, மாஹ்ஃபூஸ் பாஸ் உறுப்பினர் அல்ல

பொக்கோ செனா நாடாளுமன்ற உறுப்பினர், மாஹ்ஃபூஸ் ஓமார் இன்று நள்ளிரவிலிருந்து தான் அதிகாரப்பூர்வமாக பாஸ் கட்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

“இன்று, நான் பாஸ் தலைமை செயலாளர் தக்கியுடின் ஹசானுக்கு கடிதம் அனுப்பவுள்ளேன்.

“நான் ஏன் நள்ளிரவு 12 மணிக்கு அதனைச் செய்யவில்லை? காரணம், ஒரு நிமிடம் மூச்சை நன்றாக இழுத்து விட்டு, புதிய ஆண்டை நான் வரவேற்க எண்ணியுள்ளேன்,” என்று இன்று அலோர்ஸ்டாரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

மாஹ்ஃபூசின் மனைவியும் பிள்ளைகளும் கூட இதே முடிவை எடுத்துள்ளனர்.

இருப்பினும், அடுத்து எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார்.

பொக்கோ செனா நாடாளுமன்றத் தொகுதியை அவர் தற்காப்பாரா என்ற கேள்விக்கு, “ அது இப்போது முக்கியமல்ல,” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு முன், அவர் பக்காத்தான் ஹராப்பானுக்கு, குறிப்பாக அமானாவிற்குத் தனது ஆதரவை தெரிவித்து வந்தார்.

கடந்த அக்டோபரில், 14-வது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலிலிருந்து அவரின் பெயரைக் கெடா பாஸ் அகற்றியது குறிப்பிடத்தக்கது.