இன்று நள்ளிரவு 12 மணி தொடக்கம், சிலாங்கூர், சுங்கை ராசாவ் மற்றும் பத்து தீகா, கெடா, புக்கிட் காயு ஈத்தாம் மற்றும் ஜொகூரில் கிழக்குக்கரை இணைப்பு நெடுஞ்சாலை (இடிஎல்) ஆகிய நான்கு டோல் சாவடிகளும் மூடப்படும்.
சுங்கை ராசாவ் , பத்து தீகா மற்றும் புக்கிட் காயு ஈத்தாம் டோல் பயனீட்டாளர்கள் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட, 20 ஆண்டுகள் முன்னதாக கட்டணம் அற்ற சாலையைப் பயன்படுத்த உள்ளனர் என்று பொதுப்பணித் துறை அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
“இடிஎல்-ஐப் பொறுத்தவரை, ஜொகூர்பாரு சுல்தான் இஸ்கண்டார் கட்டிடப் பயனீட்டாளர்கள், ஜொகூர் கோஸ்வேவுக்கான பிளாஸ் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்,” என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக, இந்த நான்கு டோல் சாவடிகளிலும் பாதுகாப்பான, சீரான பயணத்திற்கு, வாகனமோட்டிகள் சாலை கட்டுப்பாட்டு மேலாண்மை மற்றும் அறிவிப்புப் பலகைகளைப் பார்த்து பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.